“பாதி சம்பளத்தை கூட கழிச்சிக்க சொல்லுங்க.. உடனே IPL-ல இருந்து நீங்க விலகணும்”.. விராட் கோலிக்கு வந்த முக்கிய அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertising
>
Advertising

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி வீரர் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை விளையாடிய போட்டிகளில் பெரிதாக ரன்களை அவர் எடுக்கவில்லை. அன்தில் இரண்டு முறை முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘விராட் கோலிக்கு உடனடியான ஒரு ஓய்வு தேவைப்படுகிறது. ஏனென்றால் அவர் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஓய்வு ஒருவருக்கு மன அமைதியை கொடுக்கும். சில நேரங்களில் நீங்கள் சமநிலையாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த ஆண்டு அவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் காலடி வைத்து விட்டார். அடுத்து 6-7 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கேரியரில் சிறப்பாக விளையாடி முத்திரை பதிக்க விரும்பினால் நான் சொல்வதை கேளுங்கள். உங்கள் நலனுக்காக சொல்கிறேன் உடனடியாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுங்கள். ஏற்கனவே 14 -15 வருடங்கள் நீங்கள் விளையாடி விட்டீர்கள். இனியும் நீங்கள் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாட வேண்டுமென்றால் ஒருசில வரையறைகளை மேற்கொள்ள வேண்டும்.

விராட் கோலி மட்டுமல்ல, எந்தவொரு வீரராக இருந்தாலும் இதுபோன்ற தருணங்களில் நீங்கள் உங்களது ஐபிஎல் அணி நிர்வாகத்திடம் சென்று, நான் பாதி ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடப் போகிறேன், அதனால் என்னுடைய சம்பளத்தில் பாதியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று வெளிப்படையாக கூறி விட வேண்டும். அது கடினமான முடிவாக இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் ஒரு சிறந்த வீரராக வெற்றிநடை போடுவதற்கு இது முக்கிய பங்காற்றும்’ என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/

VIRATKOHLI, RCB, IPL, RAVI SHASTRI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்