“நைட் 2 மணிக்கு எழுப்பி பவுலிங் பண்ண சொன்ன கூட அவுட்ஸ்விங் சூப்பரா போடுவாரு”.. இந்திய பவுலரை ‘லெஜண்ட்’ கபில் தேவுடன் கம்பேர் பண்ணிய சாஸ்திரி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி குறித்து ரவி சாஸ்திரி புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியை இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே அபார பந்து வீச்சை அவர் வெளிப்படுத்தினார். லக்னோ அணிக்கு எதிரான 4-வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற முகமது சமி முக்கிய காரணமாக இருந்தார்.
அப்போட்டியில் லக்னோ அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலை முதல் பந்திலேயே வீழ்த்தினார். இதனை அடுத்து டி காக் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோறது விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றினார். இதனால் லக்னோ அணிக்கு ஆரம்பத்திலேயே சரிவு ஏற்பட்டது. அதனால் அப்போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. மேலும் முகமது சமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முகமது சமி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் அதில், ‘முகமது சமி தற்போது சிறப்பான உடல் தகுதியுடன் உள்ளார். வேகமாக பந்து வீசும் அவர் தன்னுடைய சமநிலையை எப்போதும் இழந்ததில்லை. அதோடு துல்லியமாக பந்துவீசும் அவரது கையிலிருந்து சிறப்பாக ஸ்விங் ஆகிறது.
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவை நீங்கள் 2 மணிக்கு எழுப்பி பந்துவீச சொன்னால் அவுட்ஸ்விங் சிறப்பாக வீசுவார். அதேபோல் முகமது சமியையும் பந்து வீச சொன்னால் சிறப்பாக வீசுவார். இத்தகைய திறமை உடையவர்கள் சிலர் மட்டும்தான் உள்ளனர். அதில் முகமது சமி அபாரமான திறமை கொண்டவர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் அவுட்ஸ்விங் சிறப்பாக வீசுகிறார்’ என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
"உணவு பொருள் வாங்கக்கூட மக்கள் வரிசையில் நிற்பது கவலையளிக்கிறது".. ராஜினாமா செய்த இலங்கை அமைச்சர்..!
தொடர்புடைய செய்திகள்
- இந்திய வீரரை குறிப்பிட்டு.. அடல்ட் பட நடிகை போட்ட ட்வீட்.. ரவுண்டு கட்டிய ரசிகர்கள்
- “அவர் ஒருத்தர் ரெண்டு வீரருக்கு சமம்”.. பழைய ஃபார்முக்கு திரும்பிய ‘ஸ்டார்’ ப்ளேயர்.. தாறுமாறாக புகழ்ந்த ரவி சாஸ்திரி..!
- “அது முட்டாள்தனமான ரூல்ஸ்...” பிசிசிஐ கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி.. என்ன காரணம்..?
- "கோலி தான் காரணம்.. ரோஹித் கிடையாது.." கடும் கோபத்தில் ரசிகர்கள்.. எல்லாத்துக்கும் அந்த ஒரு ட்வீட் தான் காரணம்
- அப்போ அலி பாயிடம் வலிமை அப்டேட்.. இப்போ ஷமி பாயிடம் பீஸ்ட் அப்டேட்.. தெறிக்க விட்ட ரசிகர்கள்..
- இந்திய வீரரை மிரட்டிய பத்திரிகையாளர்.. ஒண்ணு கூடிய முன்னாள் வீரர்கள்.. "என்ன தான்'ங்க நடக்குது??"
- அவரை மாதிரி ஒருத்தர் இனி கிடைக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம்.. பல வருசமா காலியாக இருக்கும் இடம்.. கம்பீர் காட்டம்..!
- "தோனி கிட்ட இந்த பழக்கமே கிடையாது.." அவரு ரொம்ப சிம்பிள்.. முதல் முறையாக மனம் திறந்த ரவி சாஸ்திரி
- கிரிக்கெட் பத்தி அவருக்கு எதுமே தெரியல.. 'கோலி' பெயரில் மோதிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் - ரவி சாஸ்திரி
- "கங்குலி எந்த உலக கோப்பையை ஜெயிச்சு குடுத்து இருக்காரு??.." கோலியின் கேப்டன்சி விவகாரம்.. கடுப்பான ரவி சாஸ்திரி