“அவர் ஒருத்தர் ரெண்டு வீரருக்கு சமம்”.. பழைய ஃபார்முக்கு திரும்பிய ‘ஸ்டார்’ ப்ளேயர்.. தாறுமாறாக புகழ்ந்த ரவி சாஸ்திரி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஹர்திக் பாண்ட்யாவின் உடல்தகுதி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின்4-வது லீக் போட்டி நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கே.எல்,ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 19.4 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘ஹர்திக் பாண்ட்யா முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என நினைக்கிறேன். அடுத்த 4 மாதங்களில் டி20 உலகக்கோப்பை வருவது அவருக்கு நன்றாக தெரியும். அதனால் தான் கடும் உடற்பயிற்சியின் மூலம் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். பவுலிங்கில் அவர் இரண்டு வீரர்களுக்கு சமமான வீரர். அவர் மட்டும் தயாராகி விட்டால் இந்திய அணிக்கு நல்ல செய்தி என்றே சொல்லுவேன்’ என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்த ஹர்திக் பாண்ட்யா, கடந்த சில ஆண்டுகளாகவே பவுலிங் செய்யாமல் இருந்து வந்தார். மேலும் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் இந்திய அணியில் அவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.

இந்த சூழலில், தற்போது நடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஹர்திக் பாண்ட்யா, விக்கெட் ஏதும் எடுக்காமல் 37 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனாலும் 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளார். அதனால் மீண்டும் அவர் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

HARDIKPANDYA, IPL, GUJARAT TITANS, RAVI SHASTRI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்