"ப்பா, ஏன்னா டைவ்டா சாமி.." இந்த சீசனோட பெஸ்ட் 'சம்பவம்' இதான்.." 'இளம்' வீரர் பிடித்த மிரட்டலான 'கேட்ச்'.. வீடியோ இப்போ செம 'வைரல்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் தற்போது, விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா மாற்றம் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன் படி, பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணியில், விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தது. அதிகபட்சமாக, மயங்க் அகர்வால் 31 ரன்களும், கிறிஸ் ஜோர்டன் 30 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்களே எடுத்தது.

தொடர்ந்து, எளிய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியிலும், ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இருந்த போதும், ராகுல் திரிபாதி மற்றும் இயான் மோர்கன் ஆகியோர், சிறப்பாக ஆடி, கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதி வரை களத்தில் நின்ற மோர்கன், 47 ரன்கள் எடுத்திருந்தார். 6 போட்டிகள் விளையாடியுள்ள கொல்கத்தா அணி, 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதனிடையே, இந்த போட்டியில், பஞ்சாப் அணியின் இளம் வீரர் ரவி பிஷ்னாய் (Ravi Bishnoi) பிடித்துள்ள கேட்ச் ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மூன்றாவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரை எதிர்கொண்ட சுனில் நரைன் (Sunil Narine), தீப் மிட் விக்கெட் திசையில் ஓங்கி அடித்தார்.

முதலில் பந்து சிக்ஸருக்கு போனது போல தோன்றிய நிலையில், பந்து அதிகம் உயர்ந்ததால், மைதானத்திற்குள்ளேயே இருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த பந்தை நோக்கி ஓடி வந்த ரவி பிஷ்னாய், டைவ் அடித்து மிக அற்புதமாக கேட்ச் செய்து அசத்தினார்.













யாரும் எதிர்பாராத வகையில், மிக அசத்தலான கேட்ச் ஒன்றை பிஷ்னாய் பிடித்த நிலையில், இந்த சீசனின் சிறந்த கேட்ச் இது தான் என்று ரசிகர்கள் இளம் வீரருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்