"அவர எப்படி 'பெஸ்ட்' பிளேயர்ன்னு சொல்றது??.."அஸ்வினை சீண்டிய 'மஞ்சரேக்கர்'.. பதிலுக்கு ஒரே ஒரு 'ட்வீட்' போட்டு வாயடைக்கச் செய்த 'அஸ்வின்'.. 'வைரல்' சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக, தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இந்திய அணி, இன்னும் சில தினங்களில் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், நியூசிலாந்தை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ள நிலையில், இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக, 20 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்திருந்தது. இதில், தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் (Ravichandran Ashwin) இடம்பெற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ள அஸ்வின், பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறார். இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் பட்டையைக் கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, டெஸ்ட் கிரிக்கெட்டில், தவிர்க்க முடியாத உயரத்திற்கு சென்றடைவார் என்றும், தற்போதைய கிரிக்கெட் உலகின் சூழல் ஜாம்பவான் என்றும் பல முன்னாள் வீரர்கள் அஸ்வினை புகழ்ந்து வருகின்றனர்.

ஆனால், இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (Sanjay Manjrekar), அஸ்வினை ஆல் டைம் கிரேட் பவுலர் என பல முன்னாள் வீரர்கள் கூறுவதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்றும், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில், அஸ்வின் ஒருமுறை கூட ஐந்து விக்கெட்டுகள் எடுத்ததில்லை என்றும், அப்படி இருக்கும் போது அவரை எப்படி எல்லா காலத்திலும் சிறந்த வீரராக என்னால் கருத முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியிருந்தது. மேலும், இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மஞ்சரேக்கர், 'ஆல்-டைம் கிரேட்' என்பது ஒரு கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பாராட்டு மற்றும் ஒப்புதல். டான் பிராட்மேன், சோபர்ஸ், கவாஸ்கர், டெண்டுல்கர், விராட் கோலி போன்ற கிரிக்கெட் வீரர்கள் தான், என்னைப் பொறுத்தவரையில், எல்லா காலத்திலும் சிறந்த வீரர்கள். ஆனால், அஸ்வின் எல்லா நேரத்திலும் சிறந்த வீரராக என்னால் கருத முடியாது என்பதை உரிய மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என தனது ட்வீட்டில் மஞ்ச்ரேக்கர் குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு முன்பாக, ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருந்த நிலையில், அவர்கள் தங்களது திறமையை நிரூபித்து மஞ்ச்ரேக்கருக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தனர். இந்நிலையில், தன்னைப் பற்றி மஞ்ச்ரேக்கர் தெரிவித்த கருத்திற்கு, அஸ்வின் அசத்தல் பதிலடி ஒன்றை, மீம்ஸ் மூலம் தெரிவித்துள்ளார்.

 

'அந்நியன்' திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றை குறிப்பிட்டு நக்கலாக, தனது பதிலை அஸ்வின் தெரிவித்துள்ளார். தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தால், கொஞ்சமும் மனம் தளராத அஸ்வின், இப்படி வேற லெவலில் பதிலடி கொடுத்துள்ளது, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்