"எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க பா... அப்றம் என்ன 'குத்தம்' சொல்ல கூடாது"... அஸ்வினின் ஜாலி 'ட்வீட்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை, டெல்லி கேப்பிடல்ஸ் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இந்த போட்டியில், பெங்களூர் அணி பேட்டிங் செய்த போது, மூன்றாவது ஓவரை டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தை அஸ்வின் வீச வந்த போது, பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஃபிஞ்ச், அஸ்வின் பந்து வீசி முடிப்பதற்கு முன்னரே கிரீஸை விட்டு வெளியே சென்றார்.


 

அவரை மான்கட் அவுட் செய்வது போல, அஸ்வின் ஃபிஞ்சுக்கு வார்னிங் கொடுத்தார். இதனைக் கண்ட டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் புன்னகை செய்தார். முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அஸ்வின் அவுட் செய்தது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்நிலையில், அஸ்வின் மீண்டும் மான்கட் முறையில் அவுட் செய்ய முயன்ற வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, இது தொடர்பாக அஸ்வின் போட்டிக்கு பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். '2020 ஆம் ஆண்டுக்காக இது எனது முதல் மற்றும் இறுதி வார்னிங் ஆகும். அதனால் இனிமேல் நான் ஏதேனும் செய்தால் என்னை குறை கூற கூடாது. அது மட்டுமில்லாமல் நானும், ஃபிஞ்சும் சிறந்த நண்பர்கள்' என தெரிவித்துள்ளார்.

 

அஸ்வினின் இந்த பதிவும், ஐபிஎல் ரசிகர்களிடையே தற்போது அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்