‘கேப்டன்ஷி சர்ச்சை’.. இப்படி செஞ்சுதான் கோலியை இந்த முடிவை எடுக்க வச்சிருப்பாங்க.. பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பாகிஸ்தான் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு கங்குலியுடன் ஏற்பட்ட மோதலே காரணம் என பாகிஸ்தான் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். திடீரென இப்படி அவர் அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லதிஃப் (Rashid Latif) கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘கங்குலி, விராட் கோலியை புகழ்ந்தாலும், விராட் கோலி வேறு காரணங்கள் சொன்னாலும், அதில் எதுவும் உண்மை இல்லை. இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் மோதிக்கொண்டுள்ளனர். கிரிக்கெட் வாரியத்துடன் மோதியதாலே விராட் கோலி பதவியில் இருந்து விலகியுள்ளார்.

டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டியில் இருந்து திடீரென விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது அவருக்கு மறைமுகமாக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் வெற்றி பெற வேண்டிய தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா தோற்றுவிட்டது. விராட் கோலி உணர்ச்சிவசப்படக் கூடியவர். இதனால் அவரை எப்படி கோபப்படுத்த வேண்டும் என்று அங்கு சிலருக்கு நன்கு தெரிந்துள்ளது.

டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் ஒருநாள் போட்டியில் இருந்தும் அவரை நீக்கிவிட்டீர்கள். இப்போது டெஸ்ட் போட்டியில் இருந்தும் அவரே விலகிவிட்டார். விராட் கோலியை நிலைகுலைய செய்ததன் மூலம், இந்திய கிரிக்கெட்டை நிலையற்ற தன்மைக்கு கொண்டு வந்துள்ளீர்கள்’ என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லதிஃப் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

விராட் கோலி, டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய போது டுவிட் செய்த சவுரவ் கங்குலி, ‘விராட் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வேகமாக முன்னேற்றம் கண்டது. டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி எடுத்த முடிவு அவரின் தனிப்பட்ட முடிவாகும். அந்த முடிவை பிசிசிஐ மதிக்கிறது. எதிர்காலத்தில் இந்திய அணியை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு அவரது பங்கு முக்கியமானதாக இருக்கும். அவர் ஒரு சிறந்த வீரர்’ என சவுரவ் கங்குலி குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்