"ரோஹித் Tongue ஸ்லிப் ஆகி சொல்லி இருப்பாரு.." சீண்டிய முன்னாள் வீரர்.. அஸ்வின் பவுலிங் பெயரில் வெடித்த விவகாரம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி, சமீபத்தில் நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

இந்த போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதே போல, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கபில்தேவின் முக்கியமான சாதனை ஒன்றை இந்த போட்டியில் முறியடித்து காட்டினார்.

அஸ்வின் படைத்த சாதனை

டெஸ்ட் போட்டியில், அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில், இரண்டாம் இடத்தில் இருந்த கபில்தேவை (434 விக்கெட்டுகள்) முந்தி, 436 விக்கெட்டுகள் எடுத்துள்ள அஸ்வின், தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில், 619 விக்கெட்டுகளுடன் அணில் கும்ப்ளே உள்ளார்.

வாழ்த்திய பிரபலங்கள்

இதனைத் தொடர்ந்து, கபில் தேவ் உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்கள், அஸ்வினின் சாதனையை பாராட்டி வருகின்றனர். அடுத்ததடுத்து பல சாதனைகளை அஸ்வின் படைக்க வேண்டும் என்றும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

'All Time Great'

அஸ்வினின் பந்து வீச்சு பற்றி, டெஸ்ட் போட்டிக்கு பிறகு பேசியிருந்த இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, "என்னை பொறுத்தவரையில் அஸ்வின் 'All Time Great' வீரர் ஆவார். இந்திய அணிக்காக பல ஆண்டுகள் ஆடி வரும் அவர், அதிக போட்டிகளை வென்றும் கொடுத்துள்ளார். பலரும் அவர் குறித்த மாறுபட்ட கருத்தை கொண்டிருக்கலாம். ஆனால், எனக்கு அவர் எந்த காலத்திலும் சிறந்த வீரர் ஆவார்" என கூறியிருந்தார்.

மாறுபட்ட கருத்து

இந்நிலையில், அஸ்வின் குறித்து ரோஹித் சொன்ன கருத்திற்கு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப், மாறுபட்ட கருத்தினை தெரிவித்துள்ளார். "அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகமே இல்லை. தன்னுடைய பந்து வீச்சில் நிறைய வேரியேஷன்களை அவர் காட்டுகிறார். இந்திய மைதானங்களில் ஆடுவதை வைத்து பார்த்தால் நிச்சயம் அவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் தான்.

அணில் கும்ப்ளே தான் பெஸ்ட்

ஆனால், வெளிநாட்டு மைதானங்களை பொறுத்தவரையில், கும்ப்ளே தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர். நான் ரோஹித்தின் கருத்தை ஒத்துக் கொள்ளவே மாட்டேன். ஜடேஜா கூட வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். முந்தைய காலத்தில், பிஷன் சிங் பேடியும் அற்புதமாக செயல்பட்டுள்ளார்.

Tongue ஸ்லிப் ஆகியிருக்கும்

இந்தியாவை வைத்து மட்டும் நாம் பேசினால், அஸ்வின் நல்ல பவுலர் தான். Tongue ஸ்லிப் ஆகி ரோஹித் அந்த கருத்தை சொல்லி இருப்பார் என நான் நினைக்கிறேன். அணி வீரர்களை ஊக்குவிக்கும் ஒரு வழி தான் அது" என ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார்.

ROHIT SHARMA, RAVICHANDRAN ASHWIN, RASHID LATIF, ரஷீத் லத்தீப், ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் ஷர்மா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்