'அந்த பையன் மனசுல எவ்வளவு வலி இருக்கும்'... 'ஆப்கானின் 102வது சுதந்திர தினம்'... நெஞ்சை உருக்கும் ரஷித் கானின் பதிவு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆப்கானிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வெளியிட்டுள்ள பதிவு பலரது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் நாடு மீண்டும் வந்துள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் தங்களுடைய 102வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறார்கள். மிகவும் கடுமையான ஒரு வரலாற்றுச் சூழலில் இந்த சுதந்திர தினம் அவர்களுக்கு வந்துள்ளது. தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் அங்கு ஜனநாயகமற்ற ஒரு விதமான அமைதியற்ற சூழல் தற்போது நிலவி வருகிறது.

ஆப்கானில் நிலைமை இப்படி இருக்கும் சூழ்நிலையில், அந்நாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் ரஷித் கான் சுதந்திர தினத்தையொட்டி ட்விட்டர் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “இன்று, நம்முடைய தேசம் குறித்து மதிப்பீடு செய்யச் சிறிது நேரம் எடுத்துக் கொள்வோம். தியாகங்களை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அமைதியான, மேம்பட்ட மற்றும் ஒற்றுமையான நாட்டிற்காக நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆப்கான் நாட்டின் கொடியை அவர் முத்தமிடுவது போன்ற படத்தையும், ஆப்கான் கொடியையும் பகிர்ந்துள்ளார். கன்னத்தில் ஆப்கான் கொடியை ஸ்டிக்கர் போல் ஒட்டிய புகைப்படம் ஒன்றினையும் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பும் தாலிபான்கள் காபூல் நகரைக் கைப்பற்ற உடன் அமைதியை வலியுறுத்தி கருத்துக்களை முன் வைத்து இருந்தார்.

ஐக்கிய அமீரகம் மற்றும் ஓமனில் இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ரஷித் கான் உள்ளிட்ட ஆப்கான் கிரிக்கெட் அணியும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ரஷித் கானின் இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் பலரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷித் கானுக்கு அவரது நாட்டை தாண்டி பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பல நாடுகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்