"அய்யய்யோ, அது மட்டும் வேணாம்'ங்க.. நான் இப்படியே இருந்துக்குறேன்.." 'பயந்து' நடுங்கும் ரஷீத் கான்.. 'காரணம்' என்ன??..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அஸ்கர் அப்கான், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செயல்பட்டு வந்த நிலையில், அவரை நீக்கிய அணி நிர்வாகம், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியின் கேப்டனாக ஹஷ்மத்துல்லா ஷாஹிடியை நியமித்துள்ளது.
தொடர்ந்து, டி 20 போட்டியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்பது பற்றியும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கான் (Rashid Khan), தன்னை கேப்டனாக டி 20 போட்டிகளில் செயல்பட அணி நிர்வாகம் அணுகியது பற்றி மனம் திறந்துள்ளார்.
இது பற்றி பேசிய ரஷீத் கான், 'நான் ஒரு வீரராக சிறந்தவன் என்பதில் தெளிவாக உள்ளேன். நான் அணியின் துணை கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறேன். அந்த வகையில், அணியின் கேப்டனுக்கு சிறந்த ஆலோசனைகளையும் என்னால் வழங்க முடியும். இதனால், கேப்டன் பதவியில் இருந்து நான் விலகியிருப்பது தான் நல்லது. ஒரு வீரராக, அணிக்கு சிறப்பான பங்காற்ற விரும்புகிறேன்.
ஒரு கேப்டனாக நான் அணியில் இருப்பதை விட, சுழற்பந்து வீச்சாளராக இருந்தால், அணிக்கு பேருதவியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். ஒரு வேளை கேப்டனாக நான் செயல்படும் பட்சத்தில், அது நிச்சயம் எனது ஆட்டத் திறனை பாதிக்கும் என பயப்படுகிறேன். இதனால், ஒரு வீரராகவே நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறேன். அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழு என்ன முடிவு எடுத்தாலும், நான் பின்னால் இருப்பேன். மேலும், அதனை நான் பாராட்டவும் செய்வேன்' என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளில், 2 கேப்டன்கள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் சில அணிகளும், இரண்டு கேப்டன்கள் வரை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்திய அணியில், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், விராட் கோலியே தான் செயல்படுகிறார்.
அவர் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இயங்கி வந்தாலும், ரோஹித்தை டி 20 போட்டியிலும், ரஹானேவை டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாகவும் நியமிக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு மிக முக்கிய காரணம், அப்படி 'ஸ்ப்ளிட் கேப்டன்சி' ஆகும் பட்சத்தில், கோலி தலை மீதுள்ள பாரம் சற்று குறைந்து, அவர் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தலாம் என்பதற்காக தான். ரஷீத் கான், தனது பந்து வீச்சுத் திறன் மீது பாதிப்பு ஏற்படும் என்ற பயத்தில், கேப்டன் பதவியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஐசிசி' விருதுகள் அறிவிப்பு... 'தோனி'க்கு கிடைத்த மிகப்பெரிய 'கவுரவம்'!!!... 'முக்கிய' விருதை தட்டிச் சென்ற 'இளம்' வீரர்!!... முழு விவரம் உள்ளே!!
- Video : "ஜஸ்ட் மிஸ்..." 'பவுண்டரி' லைனுக்கு அருகே 'மேஜிக்' செய்து காட்டிய 'ரஷித் கான்'... வைரலாகும் 'வீடியோ'!!!
- "எனக்கும் அவர் பௌலிங்ல விளையாடணும்... எல்லோரும் அவர பத்திதான் பேசறாங்க!!!"... 'சச்சின் எதிர்கொள்ள விரும்பும் இளம்வீரர்???'...
- "2 வருஷம் முன்னாடியே மும்பை செஞ்ச அந்த காரியம்?!!... அப்படியொரு துணிச்சல் எந்த டீமுக்கும் இல்ல!!!"... 'போட்டுடைத்த கிரிக்கெட் பிரபலம்!'...
- "இப்படியும் நடக்குமா???..." - 'ஒரே Ball-ல ரெண்டு முறை Out ஆன 'முக்கிய' வீரர்!'... 'அடுத்தடுத்து நடந்த ஆச்சர்யம்... இன்ப அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!!!' - என்ன நடந்தது???
- எல்லா டீம் 'கேப்டன்'களும்... விரும்புற ஒரே பவுலர் 'இவர்' தான்... அவரு சும்மா வேற மாதிரி"... புகழந்து தள்ளிய 'சுனில்' கவாஸ்கர்!!!
- 'சாலை' விபத்தில் உயிரிழந்த பிரபல 'கிரிக்கெட்' வீரர்... "திரும்பி வருவாருன்னு தான் நெனச்சோம்... இப்டி நடக்கும்னு நினைக்கல..." அதிர்ச்சியில் 'ரசிகர்கள்'!!!
- 'பைப்புக்குள் பக்காவா பேக்கிங்'... 'பாக்க பால் பவுடர் போல இருக்கும்'... 'ஒர்த் மட்டும் 1000 கோடி ரூபாய்'... கொரோனா நேரத்தில் மிரள வைத்த கும்பல்!
- 'மனைவி'யின் மூக்கை அறுத்த 'கணவன்'... ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 'மனைவி'... 'இதுக்காக எல்லாமா இப்படி பண்ணுவாங்க'? - உச்சகட்ட 'கொடூரம்'!!!
- 'இந்த நாட்டில் மட்டும்'... '1 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு?'... 'அதிர்ச்சி கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்'...