"ஒரே ஓவர்'ல இப்டி தான் 22 ரன் அடிச்சோம்.." மேட்ச் முடியுற நேரத்துல ரஷீத் போட்ட பிளான்.. "செமயா வொர்க் அவுட் ஆயிடுச்சே.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்து முடிந்த போட்டியில், கடைசி பந்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

"ஒரே ஓவர்'ல இப்டி தான் 22 ரன் அடிச்சோம்.." மேட்ச் முடியுற நேரத்துல ரஷீத் போட்ட பிளான்.. "செமயா வொர்க் அவுட் ஆயிடுச்சே.."
Advertising
>
Advertising

டாஸ் வென்று குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்யவே, முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.

அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 65 ரன்களும், மார்க்ரம் 56 ரன்களும் எடுத்திருந்தனர். அதே போல, 20 ஆவது ஓவரின் கடைசி 3 பந்துகளில் சிக்ஸர்களை விரட்டிய சஷாங்க் சிங், 6 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தார்.

இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியும், ஆரம்பம் முதல் ரன் வேட்டையில் ஈடுபட்டது. தொடக்க வீரர் சஹா கிடைக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிகளுக்கு விரட்டிக் கொண்டிருந்தார். 38 பந்துகளில், 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 68 ரன்கள் எடுத்த சஹா, உம்ரான் மாலிக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

ஒரே ஓவரில் 25 ரன்கள்..

ரன் சரியாக வந்து கொண்டிருந்த போதும், கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு 22 ரன்கள் வேண்டும் என்ற நிலை உருவானது. அந்த வேளையில், டெவாட்டியா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் களத்தில் இருந்தனர். இறுதி ஓவரை மார்கோ ஜென்சன் வீச, மொத்தம் 4 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் சேர்த்தது ரஷீத் கான் - டெவாட்டியா ஜோடி.

ஹைதராபாத் கையே அதிகம் ஓங்கி இருந்த போதும், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, கடைசி இரண்டு பந்துகளை சிக்சருக்கு விரட்டி இருந்தார் ரஷீத் கான். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், சிறப்பாக பந்து வீசி இருந்த ஜென்சன், 22 ரன்களை ஒரே ஓவரில் அள்ளிக் கொடுத்தது, SRH ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

வெற்றிக்கு பின்னால் உள்ள ரகசியம்..

இருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சிறந்த ஃபார்மில் திரும்பி வருவார் என்றும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடைசி ஓவரில் 22 ரன்களை எப்படி அடிக்க முடிந்தது என்பது பற்றி, போட்டிக்கு பின்னர் ரஷீத் கான் பேசியுள்ளார்.

"ஹைதராபாத் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் கவனம் செலுத்தி வரும் எனது பேட்டிங் மீது அதிக நம்பிக்கை இருந்தது. இதனால், எனது ஆட்டத்தை நான் விளையாட முயற்சித்தேன்.

ரஷீத் போட்ட பிளான்..

கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலை வந்ததும், டெவாட்டியாவிடம், 'நமது சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரின் கடைசி ஓவரில் அவர்கள் 25 ரன்கள் எடுத்தனர். அதே நம்பிக்கையை நாமும் கொண்டிருப்போம். பயப்பட வேண்டாம். எதுவும் சாத்தியம் தான்.  அவுட்டாகாமால் இருங்கள். அடிப்பதை வலுவாக அடியுங்கள்' என்றும் நான் அவரிடம் கூறினேன். இது தான் எங்களின் திட்டமாக இருந்தது" என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

RASHID KHAN, RAHUL TEWATIA, GT VS SRH, GUJARAT TITANS, ரஷீத் கான்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்