‘தோனியை பத்தி ஒரு வார்த்தையில சொல்லுங்க’.. இன்ஸ்டாகிராமில் ‘கேள்வி’ கேட்ட ரசிகர்.. யாரும் எதிர்பார்க்காத பதிலளித்த ரஷீத் கான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் தோனி குறித்து எழுப்பி கேள்விக்கு ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அற்புதமான பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. அதனால் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக அதிகமாக கிரிக்கெட் தொடர்கள் நடைபெறாததால், வீரர்கள் வீட்டில் அடைந்து இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் தற்போது ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விராட் கோலி, யுவராஜ் சிங், தோனி ஆகியோர் குறித்து ஒற்றை வார்த்தையில் பதிலளிக்கும்படி ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரஷீத் கான் விராட்கோலி குறித்து ஒரு வார்த்தையில் கூறுகையில் அவர் ‘கிங் கோலி என்றும், யுவராஜ் சிங்கை ‘சிக்சர் மன்னன்’ என்றும் குறிப்பிட்டார். அப்போது தோனி குறித்து பதிலளிக்கையில் ‘அவரை வர்ணிக்க ஒரு வார்த்தை போதாது’ என கூறி ரசிகர்களின் அன்பை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து கடந்த கால கிரிக்கெட்டில் யாருக்கு பந்துவீச ஆசைப்படுகிறீர்கள் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீச ஆசைப்படுவதாக ரஷீத் கான் கூறினார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் பீட்டர்சன் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ஆகியோரின் புல்ஷாட் சிறப்பாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

அதேபோல் தமிழில் பிடித்த பாடல் எது என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சமீபத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடல் பிடிக்கும் என ரஷீத் கான் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்