Video: மொதல்ல அப்பா அப்புறம் 'அம்மா'வும்... போட்டிக்கு பின் 'கலங்கிய' முன்னணி வீரர்... ரசிகர்கள் உருக்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற ஹைதராபாத்-டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய இறங்கிய ஹைதராபாத் அணிக்கு வார்னர்-பேர்ஸ்டோ இணைந்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் கனே வில்லியம்சனும் (41) தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியை ஹைதராபாத் அணி 147 ரன்களுக்கு சுருட்டியது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்த ஹைதராபாத் அணி தற்போது முதல் வெற்றியை பெற்று மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளது. குறிப்பாக அந்த அணியின் பவுலர் ரஷீத் கான் தவான், ஷ்ரேயாஸ், பண்ட் ஆகிய 3 பேரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

அணி வெற்றி பெற காரணமாக இருந்த ரஷீத் மேன் ஆஃப் தி மேட்ச் பெற்றார். விருதுக்கு பின் பேசிய அவர், ''கடந்த ஒன்றரை ஆண்டுகள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. முதலில் என்னுடைய அப்பா இறந்தார். 3-4 மாதங்களுக்கு முன் என்னுடைய அம்மா இறந்தார். அவர் என்னுடைய மிகப்பெரிய ரசிகை. நான் ஏதாவது ஒரு போட்டியில் அவார்ட் வாங்கினால் இரவு முழுவதும் அதுகுறித்தே பேசிக்கொண்டு இருப்பார். இந்த அவார்டை நான் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்,'' என உருக்கமாக பேசியுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் கவலைப்படாதீங்க ப்ரோ நாங்க இருக்கோம் என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். வேறு சிலர் இவ்வளவு சோகத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைத்து இருக்கிறீர்கள். இதை நினைத்து உங்களுடைய பெற்றோர் கண்டிப்பாக பெருமிதம் கொள்வார்கள் என உருக்கமாக போஸ்ட் செய்து வருகின்றனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்