‘கேப்டனான ரஷித் கான்’.. அப்போ அவரு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ரஷித் கானை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அஸ்கார் ஆப்கான் இருந்து வந்தார். அவர் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துவந்த நிலையில், தற்போது அவரை நீக்கிவிட்டு மூன்று போட்டிகளுக்கு தனித்தனியாக மூன்று கேப்டன்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
அதன்படி ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக குல்பாடின் நைப்பும், துணைக் கேப்டனாக ரஷித் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக ரமத் ஷாவும், துணை கேப்டனாக ஹஸ்மத் ஷாகிதியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் டி20 போட்டிக்கு கேப்டனாக ரஷித் கானும், துணை கேப்டனாக ஷபிக்குல்லா ஷபக்கும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ரஷித் கான் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சர்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மாஸ் காட்டிய சிஎஸ்கேவின் சின்ன ‘தல’.. டி20 போட்டியில் படைத்த இமாலய சாதனை!
- 'ஆள விடுங்கடா சாமி'...நான் இனிமேல்...கிரிக்கெட் மட்டும் விளையாடிக்குறேன்!
- ‘ரெண்டு நிமிஷம் அமைதியா இருங்க’.. கோலியின் கோரிக்கையை ஏற்ற ரசிகர்கள்!
- ‘4 பந்துகளில் 4 விக்கெட்’.. உலக சாதனை படைத்த சுழற்பந்து வீச்சாளர்!
- புதுசு புதுசா சாதனை பண்றீங்க...'55 பந்து தான்...டி20 போட்டியில்'...புதிய சாதனை படைத்த இந்திய வீரர்!