ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சி கோப்பை விளையாடிய வீரர் அதிர்ச்சி மரணம்!.. சோகத்தில் மூழ்கியது கிரிக்கெட் உலகம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரஞ்சி கோப்பைத் தொடரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற காரணமாக இருந்த வீரரின் மரணம் கிரிக்கெட் உலகை கலங்கடித்துள்ளது.
2021 ஐபிஎல் சீசன் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர். இந்த சீசனில் இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
இன்னும் 31 போட்டிகள் வரை மீதம் இருக்கிறது. இதனால் மீதமுள்ள போட்டிகளை எல்லாம் எப்போது, எங்கு நடத்தப்படும் என்று கேள்வி எழுந்தது. இவ்வாறு ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டதன் காரணமாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் அவசர கூட்டத்தை நடத்தி உடனடியாக ஐபிஎல் தொடரை நிறுத்த முடிவு செய்தனர்.
ஐபிஎல்லில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஸ்டாப்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரது நலனை கருதி தான் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயலஸ் அணிக்காக ஐபிஎல் மற்றும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடிய விவேக் யாதவ் நேற்று கொரோனாவால் மருவத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 36 வயதான இவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி யாதவ் நேற்று காலமானார். இதனை இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வருத்ததுடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். விவேக் யாதவ் 18 முதல்தர போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எல்லாரும் சொந்த ஊருக்கு கிளம்பிட்டாங்க...' ஆனா 'இவரு' மட்டும் இங்கையே மாட்டிகிட்டாரே...! - கொல்கத்தா அணிக்கு மேலும் ஒரு தலைவலி...!
- '4 வருஷமா விளையாடுறாரு... அப்படி என்ன சாதிச்சாருனு கேட்டா.. 'இத' எடுத்து காட்டுங்க'!.. லைசண்டாக சம்பவம் செய்த தீபக் சஹார்!
- 'எங்க ஊருக்கு வாங்க... புடிச்சிருந்தா விளையாடுங்க!.. ஆனா ஒரு கண்டிஷன்'... ஐபிஎல்-ஐ நடத்தி முடிக்க... பிசிசிஐ-க்கு வந்த ஜாக்பாட் கால்!
- நெருங்கும் 'டெஸ்ட்' சாம்பியன்ஷிப் இறுதி போட்டி.. 'இந்திய' அணியை அறிவித்த 'பிசிசிஐ'.. யார் யாருக்கு எல்லாம் 'வாய்ப்பு'?!
- வீடு திரும்பியதும் கோலி செஞ்ச ‘முதல்’ வேலை.. ‘நீங்களும் இதை பண்ணுங்க’.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்..!
- ‘அவங்களுக்கு நன்றி சொன்னா மட்டும் போதாது’!.. வீடு திரும்பியதும் ‘முதல்’ ஆளாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட டெல்லி அணியின் ‘ஸ்டார்’ ப்ளேயர்.!
- ‘வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்’!.. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா.. ட்விட்டரில் ஒரு வேண்டுகோள்..!
- 'நீங்க செஞ்ச இந்த உதவிய வாழ்க்கைல மறக்கமாட்டோம்'!.. மும்பை இந்தியன்ஸ் அணி செய்த காரியத்தால்... வணங்கி நிற்கும் பிசிசிஐ!.. நெகிழ்ந்த வீரர்கள்!
- 'வேகமெடுக்கும் கொரோனா'... 'இந்தியப் பயணிகள் யாரும் வரக்கூடாது'... அதிரடி தடை போட்ட நாடு!
- ஒரு வருஷம் பணம் சம்பாதிக்க முடியலன்னா இப்போ என்ன...? ரெண்டு வாரம் முன்னாடியே இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு சொன்னேன், எங்க கேட்டாங்க...? - அக்தர் காட்டம்...!