வரப்போகுது இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்?.. புதிய பிளான் ரெடி?.. கிரீன் சிக்னல் கெடச்சா சரவெடி தான்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபல ஆண்டுகளாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வராமல் இருக்கும் நிலையில், அது பற்றியான திட்டம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி என்றால், இரு நாடுகளின் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும், டிவி முன்பு தான் அமர்ந்திருப்பார்கள்.
இரு அணிகளும் மோதினால், போட்டியின் ஆரம்பத்தில் இருந்து, இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது. அந்த அளவிற்கு, இரு அணி வீரர்களும் முட்டி மோதிக் கொள்வார்கள்.
ரசிகர்கள் வருத்தம்
ஆனால், கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இந்த இரு அணிகளும் தனியாக, எந்தவித தொடர்களிலும் ஆடவில்லை. கடைசியாக, கடந்த 2012 ஆம் ஆண்டு, இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி, ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 தொடரில் ஆடியிருந்தது.
அதன் பிறகு, ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன. கடைசியாக, கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பைத் தொடரில், இந்திய அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி வரலாறு படைத்திருந்தது. ஒரு காலத்தில், அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்களை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடி வந்தது. அதன் பிறகு, பல்வேறு காரணங்களுக்காக, இரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதில்லை.
முன் வைக்கும் கோரிக்கை
இருந்த போதும், இரு அணிகளின் ரசிகர்களும், இரு அணிகளுக்கும் இடையில், போட்டிகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆண்டிற்கு ஒரு முறையாவது, இரு அணிகளின் போட்டிகளை நடத்த வேண்டுமெனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதற்கென முன்னேற்பாடான ஆலோசனை ஒன்றை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
ஐடியா கொடுத்த ரமீஸ் ராஜா
இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், '4 நாடுகள் பங்கேற்கும் டி 20 சூப்பர் சீரியஸ் ஒன்றை நடத்துவது பற்றி, ஐசிசிக்கு பரிந்துரை செய்யவுள்ளோம். இதில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்கலாம். வருடத்தில் ஒரு முறை நடைபெறும் இந்த போட்டியை, ஒவ்வொரு நாடுகளிலும் மாற்றி மாற்றி நடத்திக் கொள்ளலாம்.
ஐசிசி ஒப்புதல் வேண்டும்
இதிலிருந்து வரும் வருவாயை சரிசமமாக பிரித்துக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு ஐசிசி ஒப்புதல் அளித்தால் நிச்சயம் வெற்றி பெறும்' என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். ரமீஸ் ராஜா குறிப்பிட்டது போலவே, நடைபெற வேண்டும் என்றால், ஐசிசி இந்த தொடருக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகுமா?
அதே போல, அவர் சொன்ன அனைத்து அணி நிர்வாகமும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல், அடுத்த பல ஆண்டுகளுக்கு எக்கச்சக்க தொடர்களை, ஐசிசி திட்டமிட்டு வைத்துள்ளது. இதற்கு மத்தியில், ரமீஸ் ராஜா, எப்படி இந்த சூப்பர் சீரியஸ் தொடரை நடத்த முடியும் என்பதையும் ஆலோசித்து அறிவிக்க வேண்டும்.
அப்படி எல்லா வழிகளும் சரியாகி, கிரீன் சிக்னல் கிடைத்தால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டியைக் காண, ஆவலுடன் இருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை, பூர்த்தி செய்யும் என்றே தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கேப்டவுன் டெஸ்ட் நடக்குமா? மழை ஏதும் குறுக்க வருமா? பிட்ச் யாருக்கு சாதகம்? இந்தியா ஜெயிக்க வாய்ப்பிருக்கா? நிலவரம் என்ன
- ஆஹா, இந்தியா டீம்'ல இப்டி ஒரு சிக்கல் வேற இருக்கா?.. என்ன செய்யப் போகிறார் கோலி??
- அட நம்புங்க.. உண்மையாவே போன மேட்ச்ல விளையாடாததுக்கு ‘காரணம்’ இதுதான்.. கேப்டன் கோலி ஓபன் டாக்..!
- ‘தல’ தோனியவே சீண்டிப் பார்க்கிறீங்களா..! ஒரே ஒரு கமெண்ட் தான்.. KKR-க்கு ‘நெத்தியடி’ பதில் கொடுத்த நம்ம ஜடேஜா..!
- ரொம்ப முக்கியமான போட்டி.. கோலி விளையாடுவாரா..? மாட்டாரா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. கே.எல்.ராகுல் கொடுத்த விளக்கம்..!
- அதென்ன ரஹானேவை மட்டும் ‘டார்கெட்’ பண்றீங்க.. கோலி கூட தான் சொதப்பிட்டு இருக்காரு.. நேக்கா கோர்த்துவிட்ட முன்னாள் வீரர்..!
- ஆல் தி பெஸ்ட் அண்ணா..! வாழ்த்து மழையில் ஹனுமா விஹாரி.. கோலியால் அடித்த அதிர்ஷ்டம்..!
- திடீரென ‘விலகிய’ விராட் கோலி.. கேப்டன் ஆனார் கே.எல்.ராகுல்.. என்ன காரணம்..?
- ஏன் ‘கோலி’ செய்தியாளர்கள் சந்திப்புக்கு வரல..? டிராவிட் கொடுத்த விளக்கம்.. இதுக்கு பின்னாடி இப்படியொரு ‘காரணம்’ இருக்கா..?
- போட்டியை நிறுத்திய அஸ்வின்.. நடுவரை ரவுண்டு கட்டிய இந்திய வீரர்கள்.. என்ன நடந்தது?