"மும்பை வேணாம்.. சிஎஸ்கே'ல தான் நான் ஆடணும்.." விருப்பப்பட்ட இளம் வீரர்.. கடைசி'ல நடந்தது தான் 'செம' விஷயம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மார்ச் 26 ஆம் தேதியன்று, 15 ஆவது ஐபிஎல் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

Advertising
>
Advertising

இந்த இரண்டு அணிகளும் தான் கடந்த ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் மோதியிருந்தது. இதில், சென்னை அணி நான்காவது முறையாக, ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியிருந்தது.

தொடர்ந்து, இந்த முறையும் கோப்பையைத் தக்க வைக்கும் முயற்சியில், சென்னை அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

சென்னை அணியின் தேர்வு

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் வைத்து நடைபெற்றிருந்த ஐபிஎல் மெகா ஏலத்தில், சில அனுபவ மற்றும் இளம் வீரர்கள் என குறி வைத்து தூக்கி, சென்னை அணி பட்டையைக் கிளப்பியிருந்தது. இதில், பலரின் திரும்பிப் பார்க்க வைத்த தேர்வு என்றால், அது இளம் வீர்ர் ராஜ்வர்தனை சிஎஸ்கே அணி எடுத்தது தான்.

U 19 உலக கோப்பை

சமீபத்தில் நடந்து முடிந்த U 19 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்திருந்தது. இதன் இந்திய அணியில், ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் என்ற ஆல் ரவுண்டர் இடம்பிடித்திருந்தார். சுமார் 140 கி.மீ வேகத்தில் பந்து வீசக் கூடிய ராஜ்வர்தன் உலக கோப்பை போட்டியின் போதே அதிக கவனத்தை ஈர்த்திருந்தார்.

ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர்

தெடர்ந்து, ஐபிஎல் ஏலத்தில் இவரை எடுக்க, மும்பை மற்றும் சென்னை அணிகள் போட்டி போட்டது. இறுதியில், சென்னை அணி, ராஜ்வர்தனை 1.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. சிஎஸ்கே தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ராஜ்வர்தனை, தோனி மற்றும் சென்னை அணியின் பயிற்சியாளர்கள், அதிக முனைப்பு காட்டி, தயார் செய்து வருகின்றனர்.

இர்பான் பதான் கோரிக்கை

U 19 அணி வீரர் ஒருவரை தோனி தயார் செய்து வருவதால், அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்றும், தற்போதே கருத்து தெரிவிக்க ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். இதனிடையே, இர்பான் பதான் கூட, காயத்தால் அவதிப்பட்டு வரும் தீபக் சாஹருக்கு பதில், ஆரம்பத்தில் சில போட்டிகளில் ராஜ்வர்தனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை டீம் போதும்

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ராஜ்வர்தன் சில கருத்துக்களை பேசியுள்ளார். ஏலம் நடந்த போது, நண்பர்களுடனான உரையாடல் ஒன்று குறித்தும், அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

"உன்னை மும்பை அணி ஒரு வேளை எடுக்கும். அல்லது சென்னை அணி எடுக்கும் என என்னிடம் நண்பர்கள் கூறினார்கள். ஆனால், நான் சென்னை அணி தான் என்னை தேர்வு செய்ய வேண்டும் என விருப்பப்டுவதாக சொன்னேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இளம் வீரர் ராஜ்வர்தன் ஆசைப்பட்டது போலவே, அவரை சென்னை அணி ஏலத்தில் எடுத்து, தற்போது தீவிரமாகவும் தயார் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

CHENNAI-SUPER-KINGS, CSK, MUMBAI INDIANS, DHONI, IPL 2022, RAJVARDHAN HANGARGEKAR, CSK VS KKR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்