‘அவரெல்லாம் உடனே ஆஸ்திரேலியா அனுப்ப தேவையில்ல’... ‘சில நேரங்களில் இப்படியும் நடக்கும்’... ‘ராஜீவ் சுக்லா விளக்கம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் திணறும் இந்திய பேட்ஸ்மேன்களை வழிநடத்த ராகுல் டிராவிட் ஆஸ்திரேலியா செல்கிறாரா என்ற கேள்விக்கு பிசிசிஐ துணைத்தலைவராக பொறுப்பேற்கவுள்ள ராஜீவ் சுக்லா பதில் அளித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்கள் மட்டுமே அடித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதற்கிடையில் கேப்டன் விராட் கோலி அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்பும் நிலையில், மூத்த வீரர் முகமது ஷமி எலும்பு முறிவு காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். மூத்த வீரர்களான கோலி, ஷமி ஆகிய இருவருமே ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பு என கூறப்படுகிறது.
இத்னிடையே அடிலெய்டு தோல்வியை அடுத்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலியாவில் வேகமான ஸ்விங் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கி, இந்திய வீரர்களை பேட்டிங்கில் மேம்படுத்த ராகுல் டிராவிட்டால் தான் முடியும் என்பதால் அவரை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்திருந்தார்.
ஏனெனில், இக்கட்டான சூழ்நிலையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் நன்றாக ஆடி, அணியின் வெற்றிக்கு உதவிய அனுபவம் கொண்டவர் என்பதாலும், என்சிஏ-வின் தலைவர் என்பதாலும் வெங்சர்க்கார் மட்டுமில்லாது ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், பிசிசிஐயின் துணை தலைவராக பொறுப்பேற்கவுள்ள ஐபிஎல்லின் தலைவர் ராஜீவ் சுக்லா அளித்த பேட்டியில், ‘முதல் டெஸ்ட்டின் ஒரு இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் நன்றாக பேட்டிங் ஆடினர்.
ஒரு இன்னிங்ஸில் தான் சொதப்பினர். இது அனைவருக்கும் நடக்கக்கூடியதுதான். பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகிய இருவரும் இந்திய வீரர்களின் பேட்டிங்கை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து அணி நிர்வாகத்துடன் ஆலோசித்து வருகின்றனர். இந்திய அணி அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடும்.
இந்திய வீரர்கள் அவர்களாகவே வெகுண்டெழக்கூடிய திறன் பெற்றவர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், அணி வீரர்களை பயிற்றுவிக்கும் வகையில் டிராவிட் உள்ளிட்ட யாரும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தேவையில்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீங்கள் இருவரும் சீனியர் வீரர்கள் தானே’... ‘இப்டி நீங்களே செய்யலாமா?’... ‘வார்னிங் கொடுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம்’...!!!
- ‘அதெல்லாம் இப்ப வேணாம்’... ‘2022 ஐபிஎல் போட்டியில் பாத்துக்கலாம்’... ‘பிசிசிஐ எடுத்த உறுதியான முடிவு’... ‘வெளியான தகவல்’!!!
- அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ‘ஓய்வு’.. திடீரென அறிவித்த முன்னாள் ‘சிஎஸ்கே’ வீரர்..!
- ‘தயவுசெஞ்சு ஆஸ்திரேலியாவுக்கு அவர உடனே அனுப்புங்க’... ‘அப்பதான் இந்திய அணியை காப்பாத்த முடியும்’... ‘பிசிசிஐ-க்கு அறிவுரை சொல்லும் முன்னாள் வீரர்’...!!!
- ‘நான் கண்ண கசக்கிட்டு பார்த்தா’... ‘இந்திய அணியை தாறுமாறாக தூர்வாரி’... ‘சந்தோஷப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான்’...!!!
- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ‘மோசமான’ ரெக்கார்டு.. அது ரன்னா இல்ல போன் நம்பரா..? சரமாரியாக கிழித்த ரசிகர்கள்..!
- கிழிஞ்ச ‘ஷூ’ போட்டு விளையாடிய இந்திய வீரர்.. இதுக்கு பின்னாடி இப்படியொரு ‘காரணம்’ இருக்கா..? ‘செம’ வைரல்..!
- இந்த ‘ஷாக்’-ஐ கொஞ்சம் கூட எதிர்பாக்கல.. அவர் பேட்டிங் பிடிக்க, ‘கோலி’ சந்தோஷத்துல சிரிக்க.. இன்னைக்கு மேட்ச்ல ‘ஹைலைட்டே’ இந்த சம்பவம்தான்..!
- ‘யார் சொல்லியும் கேட்காமல் நம்பி எடுத்த கேப்டன் கோலி’... 'சொல்லி வச்ச மாதிரியே'... 'திரும்பவும் அதே தவறை செய்த இளம் வீரர்’... ‘ட்ரோல் செய்யும் ரசிகர்கள்’...!!!
- 'ஐபிஎல் கோப்பையை ஜெயிச்சே ஆகணும்’... ‘பழைய பயிற்சியாளரையே நியமித்து’... ‘இப்பவே அதிரடி மாற்றத்திற்கு தயார் ஆன ஐபிஎல் அணி’...!!!