‘அதே கிரவுண்ட்’.. மறக்க முடியாத சம்பவம்.. மறைந்த ஷேன் வார்னேவுக்காக RR அணி எடுத்துள்ள சிறப்பான முன்னெடுப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு ஐபிஎல் தொடரில் பெரும் மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மலிங்காவின் 10 வருச சாதனையை சமன் செய்த SRH இளம் புயல்.. இதுதான் வேறலெவல் சம்பவம்..!

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே கடந்த மாதம் தாய்லாந்தில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதனை அடுத்து ஷேன் வார்னேவின் உடல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்பட்டது. மேலும் புகழ்பெற்ற மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கான இறுதி மரியாதைகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஷேன் வார்னேவுக்கு மரியாதை செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்கிறது. ராஜஸ்தான் மற்றும் மும்பை அணி வரும் ஏப்ரல் 30-ம் தேதி மோதுகிறது. இந்த போட்டி மும்பை DY. பாட்டில் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த மைதானத்தில் தான் கடந்த 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு ஷேன் வார்னே ஐபிஎல் கோப்பையை வென்றுக் கொடுத்தார். அதனால் அதே மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அன்றைய தினத்தில் ராஜஸ்தான் அணி வீரர்கள் தங்களது ஜெர்ஸி காலரில் ஷேன் வார்னேவை குறிக்கும் வகையில் ‘SW23’ என பதிக்கவுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக ஷேன் வார்னேவின் சகோதரர் ஜேசன் வார்னே மும்பைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, RAJASTHAN ROYALS, SHANE WARNE, IPL 2022, MI VS RR, MUMBAI INDIANS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்