"ஹனிமூனுக்கு இந்த இடம் போங்க... சூப்பரா இருக்கும்..." 'பும்ரா' - 'சஞ்சனா' ஜோடிக்கு 'ஐடியா' கொடுத்த ஐபிஎல் 'அணி'!!. "எப்படி எல்லாம் யோசிக்குறாய்ங்க??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ரா - சஞ்சனா கணேசன் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியில் இருந்து கிளம்பியா பும்ரா, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் விடுப்பு எடுத்துக் கொள்வதாக பிசிசிஐயிடம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, டி 20 தொடரிலும் பும்ரா பெயர் இடம்பெறாமல் போன நிலையில், அவர் திருமணம் செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியானது.

தொடர்ந்து, விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை தான் பும்ரா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் எனவும் கூறப்பட்டது. இருவரின் தரப்பில் இருந்தும் உறுதியான தகவல்கள் வெளி வராத நிலையில், இன்று இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் ஆகியோர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர்.

 

எந்தவித அறிவிப்பும் இல்லாமல், பும்ராவின் திருமண தகவல்கள், கடந்த சில நாட்களாக வலம் வந்த நிலையில், பும்ராவின் திருமணம் புகைப்படங்கள் திடீரென வெளியானதும் உடனடியாக வைரலானது. ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் பும்ரா - சஞ்சனா ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சற்று வித்தியாசமாக இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.



பும்ராவின் ட்வீட்டை பகிர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வாழத்துக்களைத் தெரிவித்ததுடன், 'ஏப்ரல் - மே மாதங்களில் மாலத்தீவு நன்றாக இருக்கும்' என புதிய ஜோடிக்கு ஹனிமூன் ட்ரிப்பிற்கான ஐடியாவைக் கொடுத்துள்ளது.
 

 

இதற்கு காரணம், வரவிற்கும் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதால், பும்ரா ஹனிமூன் செல்லும் பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியில் பவுலிங்கில் பலம் வாய்ந்த அவர், ஐபிஎல் தொடரில் இடம்பெறாமல் போகலாம். அவர் இல்லாததால், எதிரணியினரான தங்களுக்கு நெருக்கடி சற்று குறையும். அதனைக் குறிப்பிட்டு தான் ராஜஸ்தான் அணி ஏப்ரல், மே மாதங்களில் ஹனிமூன் செல்ல அறிவுறுத்தியுள்ளது.











 

பொதுவாக, ஐபிஎல் சமயங்களில் ராஜஸ்தான் அணி நக்கலாக போடும் ட்வீட்கள், இணையத்தில் வேற லெவலில் வைரலாகும். அதே போன்று தான், தற்போதும் பும்ராவை ஐபிஎல் தொடரில் இருந்து விலக்கி வைக்க வேண்டி, கிண்டலாக செய்த ட்வீட், அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்