என்னய்யா நடக்குது?… ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்தாரா சாஹல்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஹால் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வெளியான தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

போர் வேண்டாம்னு போர்டு தூக்கிய பெண் பத்திரிக்கையாளர் மாயமா?.. ரஷ்யாவில் பரபரப்பு..!

ஐபிஎல் 2022

ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் 26 ஆம் தேதி முதல் நடக்க உள்ளன.  போட்டிகளுக்கான அட்டவணை சமீபத்தில் பிசிசிஐயால் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்றிருந்தது. அதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா தொற்றின் காரணமாக, முழுமையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து தான் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த முறை அனைத்து போட்டிகளும், இந்தியாவில் தான் நடைபெறுகிறது. இதனால், 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு, முழுமையாக இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் இது தான் .மொத்தமுள்ள 70 போட்டிகளில், 55 போட்டிகள், மும்பையின் மூன்று மைதானங்களான வான்கடே, ப்ராபவுர்ன் மற்றும் DY பாட்டில் மைதானங்களிலும், மீதமுள்ள 15 போட்டிகளை புனே மைதானத்திலும் நடக்க உள்ளது.

அணியைப் பலப்படுத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்நிலையில் இந்த மும்பை அணியின் கில்லியில் ஒருவராக கோலோச்சி வந்த முன்னாள் வீரர் லசித் மலிங்காவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்த அணியின் பந்துவீச்சுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என நம்பலாம். இது சம்மந்தமாக பிங்க் நிற உடையில் மலிங்கா அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் தொடர் தொடங்கிய போது முதல் கோப்பையை வென்றது. அதற்கு பின்னர் மறுமுறை அந்த அணி கோப்பையை இன்னும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அட்மினின் குறும்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதல் கோப்பையில் ஷேன் வார்ன் தலைமையேற்று வழிநடத்தி கோப்பையை பெற்றுத்தந்தார். அதன் பிறகு அந்த அணியை ராகுல் டிராவிட், அஜிங்க்யே ரஹானே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியவர்கள் வழிநடத்தி வந்தனர்.

குழப்பத்தை உருவாக்கிய டிவீட்

இந்நிலையில் இப்போது இந்த ஆண்டு ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்டு யுஷ்வேந்திர சஹால் புதிய கேப்டனாக சற்று முன்னர் நியமிக்கப்பட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த இந்த அறிவிப்பு வெளியானதும் பழைய கேப்டனான சஞ்சு சாம்சன் சாஹலுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த மாற்றம் உண்மை என நம்பி விட்டனர். ஆனால் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அட்மின் சஞ்சு சாம்சனை டேக் செய்து ‘பொறாமை பொறாமை’ என கேலியாக கூறியுள்ளார்.

மேலும் ஒரு கமெண்ட்டில் ‘இந்த அக்கௌண்ட்டை சஹால் ஹேக் செய்துவிட்டார்’ எனக் கூற பிறகுதான் விளையாட்டாக பதியப்பட்டது என்று. இந்த டிவீட்டில் பல ரசிகர்கள் அறிவிப்பு உண்மை என நம்பி கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் பல கமெண்ட்களுக்கு சஹால் ஜாலியாக பதிலளித்து வருகிறார்.

‘பாட்டி சடலம் அருகே கிடந்த எலுமிச்சை பழம்’.. காலேஜ் போய்ட்டு வீட்டுக்கு வந்த பேத்தி கண்ட காட்சி.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

CRICKET, RAJASTHAN ROYALS TEAM, NEW CAPTAIN, IPL, IPL2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்