"அண்ணனுக்கு ஒரு 'பிரியாணி' பார்சல்..." 'ஹைதராபாத்' அணியை கலாய்த்து 'ட்வீட்' போட்ட 'ராஜஸ்தான்'... வைரலாகும் 'பதிவு'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் கை அதிகம் ஓங்கியிருந்த நிலையில், ராஜஸ்தான் அணி வீரர்கள் டெவாட்டியா மற்றும் பராக் ஆகியோர் சிறப்பாக ஆடி த்ரில் வெற்றி பெற உதவினர். இந்த ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற டெவாட்டியா மிகப்பெரிய பங்காற்றினார்.

அவரது பேட்டிங்கையும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் பாராட்டி வரும் நிலையில், ராஜஸ்தான் அணி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஹைதராபாத் அணியை குறி வைத்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது. ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோவை (Zomato) இணைத்து, 'எங்களுக்கு பெரிய ஹைதராபாத் பிரியாணி தற்போது தேவைப்படுகிறது' என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். 


 

இது தற்போது ஐபிஎல் ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது. முன்னதாக, அனைத்து ஐபிஎல் அணிகளின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களும் ஏதோ மீம்ஸ் க்ரியேட்டர்கள் போல மற்ற அணிகளை கலாய்த்தும், தங்கள் அணி வீரர்களை குறித்து காமெடியாக பதிவிட்டும் வருவது வாடிக்கையாகி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்