‘இவங்கள வச்சு மட்டும் ஐபிஎல் நடத்தலாமே’!.. ராஜஸ்தான் ராயல்ஸ் சிஇஓ சொன்ன புது யோசனை..! என்ன தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா வைரஸ் போன்ற கடினமான காலங்களில் ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்கள் நடத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சி.இ.ஓ ரஞ்சித் பர்தாக்கூர் புதிய யோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெளிநாட்டு வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளும் சூழ்நிலை இல்லாததால் இந்திய வீரர்களை மட்டுமே வைத்து ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சி.இ.ஓ ரஞ்சித் பர்தாக்கூர் புதிய யோசனை வழங்கியுள்ளார்.

இதுகுறித்த தெரிவித்த அவர், ‘நாங்கள் குறைப்பட்ட போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரை ஆதரிக்கிறோம். கடைசியில் இது இந்தியன் பிரீமியர் லீக் தானே. முன்னதாக இந்தியர்கள் மட்டுமே விளையாடும் ஐபிஎல் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் இப்போது நம்மில் இருந்தே தேர்ந்தெடுத்து விளையாடும் அளவுக்கு தரம் உள்ளது. அதனால் இந்தியர்கள் மட்டுமே ஆடும் ஐபிஎல் நடத்துவது சிறந்தது. இது தொடர்பாக பிசிசிஐ முடிவெடுக்கும். வரும் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு அனைத்து சாத்தியக் கூறுகளையும் பரிசீலிப்போம்’ என ரஞ்சித் பர்தாக்கூர் தெரிவித்துள்ளார்.

CORONA, IPL, CRICKET, RAJASTHANROYALS, RANJITBARTHAKUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்