'இந்தாண்டு ஐபிஎல் தொடரில்'... 'மற்றுமொரு முக்கிய வீரர் பங்கேற்பதில் திடீர் சிக்கல்'... 'அணிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் டி20 தொடரில் மற்றுமொரு முக்கிய வீரர் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி ஐபிஎல் டி20 போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் அடுத்தடுத்து ஸ்டார் வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்  ஐபிஎல் தொடரின் முதல்பாதி லீக் ஆட்டங்களில் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் சிறந்த ஆல்ரவுண்டராக கருதப்படும் பென் ஸ்டோக்ஸ் கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த போது, நியூஸிலாந்தில் வசிக்கும் அவருடைய தந்தையின் உடல்நிலை புற்றுநோய் காரணமாக மோசமானதால் டெஸ்ட் தொடரிலிருந்து பாதியிலியே விலகிய ஸ்டோக்ஸ் இங்கிலாந்திலிருந்து நியூஸிலாந்துக்குப் புறப்பட்டார். ஆனால் நியூஸிலாந்தின் தற்போதைய விதிப்படி, வெளிநாட்டிலிருந்து யார் வந்தாலும் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவார்கள். அந்த வகையில் பென் ஸ்டோக்ஸுக்கு 14 நாள் தனிமை நேற்றுதான் முடிந்துள்ளது.

இதையடுத்து இனிமேல் ஸ்டோக்ஸ் அவருடைய தந்தையைப் பார்த்துவிட்டு, சில நாட்களை குடும்பத்தினருடன் செலவிட உள்ளார். இதன்காரனாமாக ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரின் முதல்பாதி லீக் ஆட்டங்களில் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகமும் இந்த இக்கட்டான சூழலில் பென் ஸ்டோக்ஸை குடும்பத்தினரிடமிருந்து பிரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது. அவர் தேவையான காலத்தை குடும்பத்துடன் செலவிடவே விரும்புவதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதனால் முதல் பாதி லீக் ஆட்டங்களுக்குப்பின், ஸ்டோக்ஸுடன் அணி நிர்வாகம் பேசிய பின்னரே அடுத்த கட்ட ஆட்டங்களில் அவர் விளையாடுவாரா என்பதும் தெரியவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை ரூ 12.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய வீரராக திகழும் ஸ்டோக்ஸ் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்