'அடிக்கு மேல அடின்னா கூட பரவா இல்ல...' 'இது ஒவ்வொண்ணும் இடியால வந்து விழுது...' 'ப்ளீஸ்...! யாராச்சும் கொஞ்சம் லோன் தாங்கப்பா...' - வேதனையில் ராஜஸ்தான் அணி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி பரிதாபத்தின் உச்சத்தில் உள்ளது.

2021 ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்தே அவர்களுக்கு அனைத்தும் எதிர்மறையாகவே நடந்து வந்தன. இதுவரையிலும் ராஜஸ்தான் அணி பல பிரச்சனைகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறது. முதலில் ராஜஸ்தான் அணியின் முக்கிய பலமாக இருந்த ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக போட்டிகளில் விளையாடாமல் வெளியேறினார்.

மீண்டும் ஆர்ச்சர் விளையாடுவார் மொத்தமாக தொடரில் இருந்து வெளியேறினார். இதன்பிறகு இன்னொரு முக்கிய பிள்ளரான பென் ஸ்டோக்ஸ் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

இதன்பிறகு லியாம் லிவிங்ஸ்டன் அவருடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். எட்டு வெளிநாட்டு வீரர்களில் ராஜஸ்தானில் மூன்று பேர் தொடர்ச்சியாக வெளியேறினார்கள். அதுவே அவர்கள் ஆட்டத்தில் கடும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், மேலும் ஒரு இடியாக கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக ஆண்ட்ரு டை ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணியில் தற்போது வெறும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மிகவும் பரிதாபமான நிலையில் ராஜஸ்தான் அணி உள்ளது. இதனையடுத்து தற்போது பிற அணியில் இருக்கும் வெளிநாட்டு வீரர்களை கடன் கேட்கும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ஐபிஎல் 'டிரான்ஸ்பர் விண்டோ' திறக்கப்பட்டுள்ளது. பிற அணியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வீரர்களை இதன் மூலம் தங்கள் அணிக்கு மாற்ற முடியும். இதைப் பயன்படுத்தி பிற அணியில் இருக்கும் வெளிநாட்டு வீரர்களை லோன் கேட்கும் முடிவில் ராஜஸ்தான் உள்ளது.

மற்ற அணிகள் தங்களுக்கு உதவ வேண்டும் என்று ராஜஸ்தான் நிர்வாகம் இப்போதே கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு அணியிலும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சிறந்த வீரர்களை பார்த்து, அதில் மூன்று பேரை தங்கள் அணியில் அடுக்கவிருப்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்