"நீங்க நிஜமா அப்டி நெனச்சீங்களா?".. அஸ்வின் விஷயத்தில் பரவிய வதந்தி??.. ராஜஸ்தான் அணியின் தரமான பதிலடி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் முடிவடைந்திருந்த நிலையில், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக டி 20 கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | லெஹெங்காவால் வந்த சிக்கல்.? பொசுக்குன்னு கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. உறைந்துபோன உறவினர்கள்.!

இதற்கு மத்தியில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பணிகளும் தற்போதில் இருந்தே தொடங்கி வருகிறது. இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கி இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்காகவும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்க ஆரம்பித்து விட்டனர்.

இதற்கு காரணம், டிசம்பர் மாதம் கேரள மாநிலம் கொச்சியில் வைத்து ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது தான். ஒரு சில தினங்களுக்கு கூட மொத்தமுள்ள 10 ஐபிஎல் அணிகளும் எந்தெந்த வீரர்களை அணியில் தக்க வைக்க போகிறார்கள் என்பது குறித்தும், அணியில் இருந்து விடுவித்த வீரர்கள் குறித்தும் பட்டியலை வெளியிட்டிருந்தது.

மேலும் தங்களுக்கு விருப்பமான அணிகள் எந்தெந்த வீரர்கள் தக்க வைத்துக் கொண்டார்கள் என்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் தெரிந்து கொண்டனர். இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினை மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக அந்த அணி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ட்வீட் ஒன்று பெரிய அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதி இருந்தது. 2008 ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றி இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது.

இதனால், அடுத்த சீசனிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது அதிக எதிர்பார்ப்பும் உள்ளது. அப்படி ஒரு சூழலில் அந்த அணியில் தக்க வைத்துக் கொள்ள போகும் வீரர்கள் பற்றிய லிஸ்ட் ஒன்றை ராஜஸ்தான் அணி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. முன்னதாக, அந்த அணியில் இடம்பெற்றிருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் அணி தக்க வைத்துக் கொள்ளாது என்ற ஒரு கருத்து பரவலாக இருந்து வந்தது.

அப்படி ஒரு சூழலில் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ட்ரெண்ட் போல்ட், ஹெட்மயர், சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பல வீரர்களை தக்க வைத்துக் கொண்டது ராஜஸ்தான் அணி. அஸ்வின் அணியில் இடம்பெற மாட்டார் என பலரும் குறிப்பிட்டு வந்த நிலையில், அஸ்வினை தக்க வைத்துக் கொண்ட ராஜஸ்தான், ட்விட்டரில் அஸ்வின் புகைப்படத்தை பகிர்ந்து, "நீங்கள் உண்மையில் அப்படி நினைத்தீர்களா?" என அஸ்வினை விடுவிப்போம் என நீங்கள் நினைத்தீர்களா என்பது போல குறிப்பிட்டுள்ளது.

அஸ்வின் ராஜஸ்தான் அணியில் இடம்பெற மாட்டார் என வதந்தி பரவிய நிலையில் அதற்கு ராஜஸ்தான் அணியே தக்க ட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளது.

Also Read | இறந்த ஷ்ரத்தாவின் சடலத்துடன் பேசிக் கொண்டிருந்த அஃப்தாப் ? நடு நடுங்க வைக்கும் காரியம்!!

CRICKET, RAJASATHAN ROYALS, RAJASATHAN ROYALS TWEET, RAVICHANDRAN ASHWIN, RETENTION, ராஜஸ்தான் ராயல்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்