'அரையிறுதிப் போட்டியின்போது மழை வந்தால்'... 'யாருக்கு அதிக வாய்ப்பு'???..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-நியூசிலாந்து போட்டிகள் மோத உள்ளநிலையில், 2 நாட்கள் தொடர்ந்து மழை பொழிந்தால், இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

உலகக் கோப்பை தொடரில் ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில், நடக்கும் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. மான்செஸ்டரில் நடக்கும் இப்போட்டியின்போது, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், 40 சதவிகிதம் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்படி அவ்வப்போது மழை பெய்யுமானால், அரையிறுதி ஆட்டம் டக்வொர்த் லீவீஸ் முறைக்கு மாற்றப்படும் அல்லது தடைப்பட்டு, போட்டி நிறுத்தப்படலாம்.

கடந்த ஜூன் 13-ம் தேதி நடைபெற இருந்த இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான லீக் போட்டி மழையால் நிறுத்தப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதுபோன்று நடைபெறாது. ஏனென்றால், மற்ற ஆட்டங்களை போல அல்லாமல், அரைஇறுதி அல்லது இறுதிப் போட்டிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த விளையாட்டுக்காக மற்றொரு நாள் ‘ரிசர்வ் டே’ ஒதுக்கப்பட்டிருக்கும்.

அதன்படி இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் இன்று நிறுத்தப்பட்டால், புதன்கிழமையன்று நடைபெறும். அன்றும் வானிலை மேலும் மோசமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி 10-ம் தேதி அன்றும் மழை பெய்து போட்டி நிறுத்தப்பட்டால், இரு அணிகளுக்கும் சம புள்ளிகள் வழங்கப்படும். அப்படி பார்த்தால், புள்ளிப்பட்டியலில் இந்தியா ஏற்கனவே 15 புள்ளிகளோடு இருப்பதால் நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும். நியூசிலாந்து 11 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளதால், அரையிறுதியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்