'இந்தியா-பாக். மேட்ச் நடக்குமா, நடக்காதா?'... வானிலை நிலவரத்தால் ரசிகர்கள் கவலை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடக்கவுள்ள மான்செஸ்டரில், இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளதால், ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி இன்று மான்செஸ்டரில் நடக்கிறது. இதைப்பார்க்க இரு அணி ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இங்கிலாந்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால், மழை குறுக்கீடு இருக்க அதிக வாய்ப்புள்ளது.

உலகக் கோப்பை தொடரில், இதுவரை மழை காரணமாக 4 போட்டிகள ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மான்செஸ்டர் வானிலை ரசிகர்களுக்கு மேலும் கவலை அளிக்கும் விதத்திலேயே உள்ளது. தற்போது மான்செஸ்டரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓல்டு ட்ராஃபோர்டில் நடக்க இருக்கும், இன்றைய போட்டியும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் அங்கு விட்டுவிட்டுத்தான் லோசன மழைபெய்து வருகிறது. ஆடுகளமும் மூடியே வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பரபரப்பான இந்தியா, பாகிஸ்தான் போட்டி பாதிக்கப்படுமே தவிர, முற்றிலுமாக ரத்துசெய்யப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. மான்செஸ்டர் நகரில் இன்று பிற்பகலில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்படியே மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்டாலும் ஓவர்களை குறைத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, ஆட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்