ஒருத்தரு கூட இப்டி 'நடக்கும்'னு நினைக்கல... கலாய்ச்ச 'நெட்டிசன்'களுக்கு அவரு மாஸா பதில் சொல்லிட்டாரு!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 'த்ரில்' வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தியிருந்தார்.  பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி, தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாலும் இடையில் சற்று தடுமாறியது. அப்போது  சஞ்சு சாம்சனுடன் களத்தில் இருந்த ராகுல் தேவாட்டியா பந்துகளை எதிர்கொள்வதில் சற்று தடுமாறினார்.

இதனால் வெற்றிப்பாதைக்கு சென்று கொண்டிருந்த ராஜஸ்தான் அணி சற்று பின் வாங்கியது. தேவாட்டியாவின் பேட்டிங்கை நெட்டிசன்கள் அதிகம் கலாய்க்க ஆரம்பித்தனர். 21 பந்துகளுக்கு 14 ரன்கள் மட்டுமே அவர் அடித்திருந்த நிலையில், கோர்ட்ரெல் வீசிய 18 ஆவது ஓவரில் ராகுல் தேவாட்டியா 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.

யார் காரணம் ராஜஸ்தான் அணி வெற்றி வாய்ப்பை இழப்பது போல் தெரிந்ததோ அவரே கடைசியில் அதிரடி காட்டி அணி வெற்றி பெற உதவினார். தற்போது, ராகுல் தேவாட்டியா குறித்த அதிக மீம்ஸ்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.







 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்