"தோனி அண்ணண் மாதிரி.. என்ன திட்டவும் செய்வாரு.. ஆனா, அதே நேரத்துல.." இளம் வீரர் பகிர்ந்த 'சீக்ரெட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் மெகா ஏலம், கடந்த வார இறுதியில் இரண்டு நாட்கள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

இதனைத் தொடர்ந்து, அனைத்து ஐபிஎல் அணிகளும், போட்டிகளுக்காக விரைவில் தயாராகும் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

இதில், இந்திய வீரரான ராகுல் திரிபாதியை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 8.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் கடந்த சீசனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடியிருந்தார்.

ராகுல் திரிபாதி

கடந்த 2017 ஆம் ஆண்டு, தோனி தலைமையிலான புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி மூலம், ஐபிஎல் தொடரில் ராகுல் திரிபாதி அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடியுள்ள ராகுல், இந்தாண்டு சீசனில், ஹைதராபாத் அணிக்காக ஆடவுள்ளார்.

'தி கிரேட்' தோனி

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'ஐபிஎல் போட்டிகளுக்காக நான் அறிமுகமான போது, தோனி என்னிடம் சொன்ன விஷயம் இப்போதும் ஞாபகம் இருக்கிறது. நெட்டில் எப்படி ஆடுவாயோ, அதே போல போட்டிகளிலும் ஆடு என தோனி கூறினார். அனைத்து வீரர்களையும், தன்னுடைய இளைய சகோதரர்களை போல தான் தோனி நடத்துவார்.

திட்டவும் செய்வார்

2017 ஆம் ஆண்டு தொடர் முழுக்க, என்னை அவர் தான் வழி நடத்தினார். சில நேரம், தோனி என்னை திட்டவும் செய்துள்ளார். தொடர்ந்து, ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக நான் ஆடிய போதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், நான் தோனியிடம் ஆலோசனை கேட்பேன். "நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று தான் தோனி என்னிடம் முதலில் கேட்பார்' என ராகுல் திரிபாதி தெரிவித்தார்.

தேற்றிய தோனி

தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள், 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் ஆடியிருந்தது. அப்போது ராகுல் திரிபாதி, கொல்கத்தா அணியின் இடம்பிடித்திருந்தார். அந்த சமயத்தில், தோனியுடன் நடந்த உரையாடல் சம்பவம் ஒன்றை ராகுல் திரிபாதி நினைவு கூர்ந்தார்.

அண்ணன் போல ஆறுதல்

'இறுதி போட்டியின் போது, எனக்கு காயம் ஏற்பட்டிருந்தது. இதனால், நான் 8 ஆவது வீரராக தான் களமிறங்கினேன். நான் ரன் அடிக்க மிகவும் சிரமப்பட்டேன். தொடர்ந்து, நான் சொற்ப ரன்களில் அவுட்டான போது, தோனி என் பின்னால் தட்டிக் கொடுத்து, "இன்று உனது நாளாக அமையவில்லை. ஆனாலும், நீ உன்னுடைய நூறு சதவீதத்தை கொடுத்தாய்" என என்னை தேற்றினார்.

நெகிழ்ச்சி அடைந்த வீரர்

அதே போல, இறுதி போட்டியில் தோற்றதால், நான் மிகவும் மன வேதனையில் இருந்தேன். ஆனால், அப்போதும் தோனி எனதருகே வந்து, சில நிமிடங்கள் பேசி விட்டுச் சென்றார்' என ராகுல் திரிபாதி, தோனியுடனான அழகான தருணங்களை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

RAHUL TRIPATHI, MS DHONI, IPL 2021

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்