"அவரு 'ஃபோன்' பண்ணி சொன்னப்போ... என்ன வெச்சு 'காமெடி' பண்றாருன்னு நெனச்சேன்.." 'ராகுல்' சொன்ன 'சுவாரஸ்ய' தகவல்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதற்கு அடுத்தபடியாக இரு அணிகளுக்கு இடையில், 5 டி 20 போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதற்கான இந்திய அணி, சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரர்கள் சிலருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தது. வருண் சக்ரவர்த்தி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ராகுல் டெவாட்டியா ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளது.

இதில், கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த ராகுல் டெவாட்டியா, தனது ஆல் ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ் திறமையால் கவனிக்க வைத்தார். இந்திய அணிக்காக தேர்வானது குறித்து பேசிய ராகுல் டெவாட்டியா, 'நான் இந்திய அணியில் தேர்வானது பற்றி முதலில் சாஹல் தான் என்னிடம் கூறினார். அவர் எப்போதும் போல விளையாடுவதாக நான் எண்ணினேன். ஆனால், அதன் பின்னர், மோஹித் ஷர்மா அழைத்து பேசிய போது தான் உண்மை என தெரிய வந்தது.

ஹரியானா மாநிலத்தில் இருந்து இதுவரை மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் (அமித் மிஸ்ரா, ஜெயந்த் யாதவ், சாஹல்) இந்திய அணிக்காக ஆடியுள்ளனர். வாழ்க்கை நமக்கு நிறைய சவால்களை தந்து கொண்டே இருக்கிறது. இந்திய அணியில் ஆடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நிச்சயம் அதனை நான் பயன்படுத்திக் கொள்வேன்.

இந்திய அணியின் ஓய்வு அறை, சற்று வித்தியாசமாக இருக்கும் என சிலர் சொல்லி நான் கேள்விப்பட்டுள்ளேன். எனவே, அணியின் சீனியர் வீரர்களுடன் அறையை பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் நேரத்தை கழிப்பது நான் செய்த பாக்கியம். அணி நிர்வாகமும், தேர்வாளர்களும் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்' என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்