இந்திய அணியில் இடமில்லை.. நொந்து போன இளம் வீரர் போட்ட ட்வீட்! ஆதரவுக்கரம் நீட்டிய ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராகுல் தெவாடியா ஒரு மிகச் சிறந்த ஐபிஎல் தொடரைக் கொண்டிருந்தார். இருப்பினும் இந்திய அணியில் தேர்வாகாமல் போனது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா…. பிசிசிஐ வெளியிட்ட புதிய அணியில் இடம்பெற்ற வீரர்கள்

இந்த மாத இறுதியில் அயர்லாந்தில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணியில் தெவாடியாவின் பெயர் இல்லாததால் ராகுல் தெவாடியாவின் "எதிர்பார்ப்புகள் காயப்படுத்தியது" என்ற ட்வீட் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பி உள்ளது. இந்த ட்வீட்டுக்கு ரசிகர்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ் ஆல்-ரவுண்டர் தெவாடியா மிகச் சிறந்த ஐபிஎல்லைக் கொண்டிருந்தார், ஐபிஎல் 2022 இல் 147.62 ஸ்ட்ரைக் ரேட்டில் 16 போட்டிகளில் 217 ரன்கள் எடுத்தார். தெவாடியா, குஜராத்தை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச் செல்ல 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டபோது அவர் பிபிகேஎஸ் வேகப்பந்து வீச்சாளர் ஒடியன் ஸ்மித்தை இரண்டு தொடர்ச்சியான சிக்ஸர் அடித்தார்.

தெவாதியாவின் அபாரமான ஆட்டம் 'ஐஸ் மேன்' என்ற பட்டத்தை அவருக்கு பெற்றுத்தந்தது, சுனில் கவாஸ்கர் "அவரது நரம்புகளில் என்ன ஓடுகிறது? அது ரத்தம் அல்ல. ஐஸ்! ராகுல் தெவதியாவுக்கு ஐஸ்மேன் என்று செல்லப்பெயர் சூட்ட வேண்டும்" என்று முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியது பிரபலமடைந்தது.

சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு போட்டியில் வெற்றிபெறும் முயற்சியில், கடைசி நான்கு ஓவர்களில் GT க்கு 56 ரன்கள் தேவைப்பட்டபோது, ​​டெவாடியா 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார்.

இதேவேளையில், சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சாம்சன் புறக்கணிக்கப்பட்டார். சூர்யகுமார் காயத்தால் இடம்பெறவில்லை.

Also Read | பெற்ற தாயைக் கொன்றுவிட்டு பிரதமரைக் கொல்லப் புறப்பட்ட கனடா நடிகர்.. காரணத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நீதிமன்றம்.!

CRICKET, RAHUL TEWATIA, INDIAN TEAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்