'என் தேவதை வந்து விட்டாள்'... 'போன ஐபிஎல் சீசனில் மாஸ் காட்டிய வீரர்'... 'வெளியான நிச்சயதார்த்த புகைப்படம்'... சீக்கிரம் டும் டும் டும்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ராகுல் டெவாட்டியா, ஒரே சீசன் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி ராஜஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த அவர், பஞ்சாப் அணிக்கு எதிராக பேட்டிங்கிலும் பின்னி பெடலெடுத்திருந்தார். சிறிய கிராமம் ஒன்றிலிருந்து வந்த ராகுல் டெவாட்டியா, ஆல் ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ் காட்டி, ஒரே சீசனில் வேற லெவலில் வைரலானார்.

இந்நிலையில், ராகுலுக்கு கடந்த புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் டெவாட்டியா வெளியிட்டுள்ளார். வருங்கால மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த ராகுல் டெவாட்டியாவிற்கு, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 


இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராகுல் டெவாட்டியாவை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்