கொஞ்ச நாளாவே ‘பரபரப்பாக’ போய்க்கிட்டு இருந்த விஷயம்.. இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளர் டிராவிட்டா..? இதுக்கு அவரே சொன்ன ‘பளீச்’ பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணிக்கு முழு நேர தலைமை பயிற்சியாளராக இருப்பது தொடர்பாக ராகுல் டிராவிட் விளக்கம் கொடுத்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஆனால் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி வென்றது. இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு முழு நேர தலைமை பயிற்சியாளராவது தொடர்பாக ராகுல் டிராவிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘இந்த தொடரில் கிடைத்த அனுபவத்தை நான் ரசிக்கிறேன். அதைத்தாண்டி வேறு எதையும் யோசிக்கவில்லை. நான் என்ன செய்கிறேனோ, அதை திறம்பட செய்து மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறேன். என் முழு கவனமும் இந்த தொடர் மீது தான் இருந்தது’ என ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இளம் வீரர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. முழு நேர பயிற்சியாளர் என்பது சவாலானது. அதனால், அதைப் பற்றி இப்போதைக்கு எந்த திட்டமும் என்னிடமில்லை’ என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைகிறது. இந்திய அணியின் பயிற்சியாளருக்கான வயது வரம்பு 60, ஆனால் ரவி சாஸ்திரிக்கு தற்போது 59 வயதாவதால், அவர் மீண்டும் பயிற்சியாளராக விரும்புவரா? என்பது தெரியவில்லை என முன்னாள் வீரர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்