ரிஷப் பந்த் கிட்ட ‘அதை’ பத்தி பேசுற நேரம் வந்திருச்சு.. அதிருப்தியில் ராகுல் டிராவிட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரிஷப் பந்தின் மோசமான ஷாட் தேர்வு குறித்து பேச வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

இப்போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மோசமான ஷாட் தேர்வு மூலம் அவுட்டாகி வெளியேறினார். அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது 3 பந்துகளை மட்டுமே எதிர்க்கொண்ட அவர், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ‘ரிஷப் பந்த் பாசிட்டிவாக விளையாடக் கூடியவர். அப்படி ஆடுவது அவருக்கு ஓரளவுக்கு வெற்றியை கொடுக்கிறது என்பது தெரியும். ஆனால் அவரிடம் இதுகுறித்து பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்றைக்காவது இதைப் பற்றி பேசித்தான் ஆக வேண்டும். பெரிதாக வேறொன்றுமில்லை, எந்த சமயத்தில் எந்த மாதிரியான ஷாட்களை ஆட வேண்டும் என்பதை அவருக்கு புரிய வைத்தால் போதும்.

ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் ஆட்டத்தின் போக்கை எப்போது வேண்டுமானாலும் மாற்றக் கூடியவர்கள். அதனால் அவரின் இந்த தன்மையை தடுக்க விரும்பவில்லை. சில சமயங்களில் தேவையில்லாமல் ஆக்ரோசமான ஷாட்களை ஆடுவது குறித்து அவரிடம் ஆலோசிக்க வேண்டும். டெஸ்ட் போட்டியில் கொஞ்ச நேரம் சமாளித்து ஆடிவிட்டு, செட்டில் ஆன பின்தான் அடித்து ஆட வேண்டும். அவர் இப்போதுதான் கற்றுக் கொண்டு இருக்கிறார், தொடர்ந்து கற்றுக் கொள்வார்’ என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

RISHABHPANT, RAHULDRAVID, INDVSSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்