இந்திய அணிக்கு புது கோச்.. ‘இவர் அப்ளை பண்ணிட்டாரா.. அப்போ இனி வேற யாரும் அப்ளை பண்ண அவசியமே இல்ல’.. கிரீன் சிக்னல் காட்டிய வீரர்.. தாறுமாறாக புகழ்ந்த கவாஸ்கர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் விண்ணிப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

இந்திய அணிக்கு தற்போது தலைமை பயிற்சியளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதனால் அடுத்த பயிற்சியாளராக யாரை நியமிப்பது என பிசிசிஐ தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தது.

இந்த சமயத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க பிசிசிஐ அணுகியது. ஆனால் முதலில் ராகுல் டிராவிட் மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டி முடிந்த பின், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் ராகுல் டிராவிட்டை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நேற்று, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல் டிராவிட் ஏற்கனவே இந்திய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில், இவர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அதேபோல் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதில் ஒருநாள் தொடருக்கான கோப்பையை இந்தியா வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளுக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பித்தது குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ‘சந்தேகமே இல்லை, இனிமேல் யாரும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியை அவர் கையாண்ட விதம், அவர்களுக்கு வழி காட்டியது, தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணியாற்றிய விதத்தைப் பார்த்தாலே அவரது திறமை என்ன என்பது தெரியும்.

மைதானத்துக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியேயும் நிர்வாக பணிகளில் டிராவிட் வல்லவர். அதில் அவருக்கு நிறைய திறமை உள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கு அவர் விண்ணப்பித்து எல்லாம் ஒரு சம்பிரதாயம் என்றுதான் நான் நினைகிறேன்’ என சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட்டை புகழ்ந்து பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்