VIDEO : இவரு 'டீம்'ல எறங்கி 'மாஸ்' காட்ட போறாருன்னு... "அப்போவே நான் 'முடிவு' பண்ணிட்டேன்"... 'டிராவிட்' வெளியிட்ட நெகிழ்ச்சி 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த சுதந்திர தினத்தன்று இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல கிரிக்கெட் பிரபலங்களும் தோனியின் திடீர் முடிவால் சற்று அதிர்ச்சியடைந்தனர். பலர் தோனியின் பங்களிப்பிற்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

தோனியைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய வீரரான சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், ரெய்னா குறித்து நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ ஒன்றை பிசிசிஐ, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த வீடியோவில், 'கடந்த 2004, 2005 ஆம் ஆண்டுகளின் போது, 19 வயத்துக்குட்பட்டோரான கிரிக்கெட் போட்டிகளில் ரெய்னா சிறப்பாக விளையாடினார். அப்போது ரெய்னா இந்திய அணியின் முக்கியமான வீரராக வருவார் என கருதினேன். கடந்த தலைமுறைகளில் இந்தியா பல முக்கியமான வெற்றிகளையும், நினைவுகூரத்தக்க நிகழ்வுகளையும் பெற்றுள்ளது. அதில், ரெய்னாவின் பங்கு அளப்பரியது' என்றார்.

மேலும், 'அதே போல பீல்டிங் செய்யும் போதும் அவரிடம் வெளிப்படும் ஆக்ரோஷம், கிரிக்கெட் மீதான ஆர்வம்  மிகவும் ரசிக்கும்படி இருந்துள்ளன. கிரிக்கெட் போட்டியின் போது அவர் அதிகமாக மிடில் ஆர்டர்களில் ஆடியுள்ளார். ஆனால், அவரை இன்னும்  வரிசையில் இறக்கியிருக்கலாம்.  ஏனென்றால், ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங் அணிக்காக அவர் முன் வரிசையில் களமிறங்கி பேட்டிங்கில் பல சாதனைகளை செய்துள்ளார். அவர் உண்மையில் சிறந்த கிரிக்கெட் வீரர்' என டிராவிட் தெரிவித்துள்ளார். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்