"சின்ன வயசுல என் பேட்டிங் நீங்க பாத்ததில்ல போல".. சூர்யகுமாரிடம் ஜாலியாக பேசிய டிராவிட்.. "மனுஷன் Fun பண்றாரே 😂"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முதலாவதாக டி 20 தொடர் நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

Also Read | பிரபல திரை அரங்கில் 3 Screens.. படம் திரையிடுவது பற்றி விஜய், அஜித் ரசிகர்கள் சேர்ந்து எடுத்த முடிவு!!.. வைரல்

3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற, மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் நிலை உருவாகி இருந்தது.

அப்படி ஒரு சூழலில் நடந்த கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ், பந்துகளை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். மிகவும் கடினமாக பறந்தும், படுத்தும் என ஷாட்களை அடித்து மைதானத்தில் இருந்த அனைவரையும் அசர வைத்திருந்தார்.

51 பந்துகளில் 7 ஃபோர்கள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடித்த சூர்யகுமார் யாதவ், 112 ரன்கள் எடுத்து டி 20 போட்டிகளில் தனது 3 ஆவது சதத்தையும் பதிவு செய்திருந்தார். தொடர்ந்து, டி 20 போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தால் பலரையும் அசர வைத்த சூர்யகுமார் யாதவ் உதவியுடன் இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 137 ரன்களில் ஆல் அவுட்டாகியதால் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது இரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரும் ஆரம்பமாகி நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், டிராவிட் மற்றும் சூர்யகுமார் ஆகியோரிடையே நடந்த உரையாடல் தொடர்பான விஷயம், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் ஈர்த்து வருகிறது.

ராகுல் டிராவிட் மற்றும் சூர்யகுமார் தொடர்பான நேர்காணல் ஒன்றில் சூர்யகுமாரை அறிமுகம் செய்த டிராவிட், "இப்போது என்னுடன் இருக்கும் வீரர், அவர் சிறு வயதில் வளர்ந்த போது எனது பேட்டிங்கை பார்த்திருக்கமாட்டார் என நினைக்கிறன். கண்டிப்பாக பார்த்திருக்க வாய்ப்பே இல்லை" என தன்னை தானே கலாய்த்து டிராவிட் பேச, பார்த்திருக்கிறேன் என்றும் சிரித்துக் கொண்டே பதிலளித்தார் சூர்யகுமார்.

இதன் பின்னர் பேசிய டிராவிட், "சூர்யகுமார் ஒரு தனித்துவமான வீரர். ஒவ்வொரு முறை நீங்கள் சிறந்த இன்னிங்ஸ் ஆடும் போதும் இது தான் சிறந்த இன்னிங்ஸ் என நினைக்க முடியவில்லை. அடுத்தடுத்து அதை விட சிறந்த இன்னிங்ஸ் ஆடி விடுகிறீர்கள். உங்கள் பேட்டிங்கை பார்க்க பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உங்களுக்கு பிடித்த இன்னிங்ஸ் எது?" என சூர்யகுமாரிடம் கேட்டார்.

இதற்கு பதில் சொன்ன சூர்யகுமார், "கடினமான சூழல்களில் பேட்டிங் ஆட எனக்கு பிடித்திருக்கிறது. என்னால் ஒரு இன்னிங்க்ஸை குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. முடிந்த அளவு மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்ய நான் விரும்புகிறேன். கடினமான சூழல்களில் எதிரணியின் கையோங்கும் போது தாய் சவாலாக எடுத்து நமது அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்" என தெரிவித்தார்.

 

Also Read | ரொம்ப நாளைக்கு அப்புறம்... சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ரஜினிகாந்த் .. ஃபோட்டோ பகிர்ந்து ட்வீட்..!

CRICKET, RAHUL DRAVID, SURYAKUMAR YADAV, RAHUL AND SURYAKUMAR FUN CONVERSATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்