VIDEO: ‘ஏன் இந்த கொலவெறி’!.. இவ்ளோ கோபத்துக்கும் ‘காரணம்’ அந்த RCB வீரரோட விக்கெட் தான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் வீரர் ராகுல் சஹார் மைதானத்தில் ஆக்ரோஷமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 56 ரன்களும், கேப்டன் விராட் கோலி 51 ரன்களும், ஸ்ரீகர் பரத் 32 ரன்களும் எடுத்தனர்.

மும்பை அணியைப் பொறுத்தவரை பும்ரா 3 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், ஆடம் மில்னே மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை அணி, பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் ஷர்மா மட்டுமே 43 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி, 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் மும்பை அணி இழந்தது. இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹார் (Rahul Chahar) மைதானத்தில் ஆக்ரோஷமான வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில், போட்டி பரபரப்பாக சென்றுகொண்டிருந்தபோது 9-வது ஓவரை ராகுல் சஹார் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஸ்ரீகர் பரத் (Srikar Bharat), அதை சிக்சருக்கு விளாசினார். இதனை அடுத்து அவர் ஆக்ரோஷமாக துள்ளிக் குதித்துக் கொண்டாடினார்.

ஆனால் அதற்கு அடுத்த பந்தே சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஸ்ரீகர் பரத் ஆட்டமிழந்தார். உடனே ராகுல் சஹாரும் அந்த விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடி பதிலடி கொடுத்தார். அப்போது பாராட்ட கை கொடுத்த விக்கெட் கீப்பர் டி காக்கின் கையில், சந்தோஷ மிகுதியில் ராகுல் சஹார் வேகமாக அடித்துவிட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்