அவ்ளோதான்.. இனி அவருக்கு டீம்ல இடம் கிடைக்கிறதெல்லாம் கஷ்டம் தான்.. முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரஹானே அணியில் இருந்து ஓரங்கட்ட பட வாய்ப்பு உள்ளதாக ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய அணி வரும் 26ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது.

இதனிடையே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு பதிலாக இளம் வீரர் கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ரஹானே துணை கேப்டனாக செயல்பட்டு வந்தார். அடுத்த கேப்டன் அந்தஸ்த்தில் அவர் இருந்ததால்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால் அந்த பதவியையும் தற்போது அவர் இழந்துள்ளார். அதனால் ரஹானேவுக்கு இனி அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, ‘கே.எல்.ராகுலை துணைக் கேப்டனாக நியமித்தது நிர்வாகத்தின் முடிவு. அவருக்கு இந்த பதவியை கொடுத்ததற்கு காரணமே ரஹானேவை அணியிலிருந்து ஓரம் கட்டுவதற்கு தான் என சந்தேகம் எழுகிறது. அதனால் இனி ரஹானே இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இடம் பிடிப்பது கஷ்டம் தான் என்றே தோன்றுகிறது. சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ரஹானேவுக்கு தற்போது துணை கேப்டன் பதவி மறுக்கப்பட்டுள்ளது. இதுதான் அவர் அணியில் ஓரம் கட்டப்படுவதற்கான அறிகுறி’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை ரஹானே வெளிப்படுத்தி வருகிறார். அதில் அவருடைய சராசரி 25-க்கும் குறைவாக உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே விளையாடுவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

RAHANE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்