"செஞ்சது எல்லாம் நான்.. பாராட்டு எல்லாம் அவங்களுக்கு.." குண்டை தூக்கிப் போட்ட ரஹானே.. இந்திய அணியில் பரபரப்பு
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வீரர் ரஹானே தெரிவித்துள்ள கருத்து, கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்த சீனியர் ரஹானே, கடந்த சில டெஸ்ட் தொடர்களில் மிகவும் சுமாராகவே ஆடி வருகிறார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியிருந்தது.
சீனியர் வீரர்கள் தடுமாற்றம்
இந்த தொடரை, தென்னாப்பிரிக்க அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது. இதில் இடம்பெற்றிருந்த ரஹானே, 3 போட்டிகளில் ஒரே ஒரு அரை சதத்துடன் 136 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த தொடருக்கு முன்பாகவும், பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் ரஹானே தடுமாறியிருந்தார். அவரைப் போலவே, மற்றொரு சீனியர் டெஸ்ட் வீரரான புஜாராவும், பெரிய அளவில் ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
ரசிகர்கள் கோரிக்கை
இதனால், இனி வரும் டெஸ்ட் தொடர்களில், இந்த இரண்டு சீனியர் வீரர்களையும் அணியில் சேர்க்க வேண்டாம் என ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமில்லாமல், கிரிக்கெட் பிரபலங்கள் சிலரும், ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரை மாற்றி விட்டு, இளம் வீரர்களுக்கு டெஸ்ட் தொடர்களிலும் வாய்ப்பு வழங்குங்கள் என குறிப்பிட்டு வருகின்றனர்.
வரலாற்று வெற்றி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, 2020 - 21 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில், ரஹானே சிறப்பாக ஆடியிருந்தார். இந்த தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 36 ரன்களில் சுருண்டு, அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது. அந்த போட்டியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கோலி, தன்னுடைய குழந்தை பிறப்பதையொட்டி, மீண்டும் இந்தியாவிற்கு திரும்பினார். தொடர்ந்து, மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில், கோலிக்கு பதிலாக, இந்திய அணியை ரஹானே வழி நடத்தியிருந்தார்.
விமர்சித்த ரஹானே
அந்த மூன்று போட்டிகளில், இரண்டில் வெற்றி பெற்று அசத்திய இந்திய அணி, தொடரையும் கைப்பற்றி, ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்திருந்தது. அதே போல, பிரிஸ்பேன் மைதானத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி, தோல்வியை தழுவியிருந்தது. இந்திய அணி வெற்றி பெற ரஹானேவின் கேப்டன்சி, மிகப் பெரிய பங்காற்றி இருந்தது. இந்நிலையில், இது பற்றி சில குற்றச்சாட்டுகளை தற்போது ரஹானே முன் வைத்துள்ளார்.
மிகவும் ஸ்பெஷல்
'ஆஸ்திரேலியாவில் நான் என்ன செய்தேன் என்பது எனக்கு தெரியும். நான் யாரிடமும் அதனை சொல்லிக் காட்ட வேண்டிய எண்ணம் எனக்கு இல்லை. அப்படி நானே போய் பெருமை பேசிக் கொள்வது என்னுடைய இயல்பு இல்லை. மைதானத்திலும், டிரெஸ்ஸிங் ரூமிலும் சில முக்கியமான முடிவுகளை நான் எடுத்தேன். ஆனால், அதற்கான புகழ் மற்றும் பாராட்டுக்களை வேறு ஒருவர் பெற்றுக் கொண்டார். என்னைப் பொறுத்தவரையில், அந்த வரலாற்று தொடர், எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆகும்.
எனக்கு மட்டுமே தெரியும்
ஆனால், அந்த வெற்றிக்கு, பலரும் நாங்கள் அதனை செய்தோம், இது எங்களுடைய முடிவு தான் என தம்பட்டம் அடித்துக் கொண்டனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், என்னுடைய தரப்பில் நான் என்ன முடிவுகள் எடுத்து, அணியை வெற்றி பெறச் செய்தேன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்' என தெரிவித்துள்ளார்.
திடீரென இத்தனை நாட்களுக்கு பிறகு, ஆஸ்திரேலிய வெற்றிக்கு தான் காரணமாக இருந்த போது, மற்ற பலர் அதற்கு காரணம் என பெருமை பேசுவதாக ரஹானே தெரிவித்துள்ள கருத்து, அதிகம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அவருக்கு செம டிமாண்ட்.. இந்த தடவை ரொம்ப பணத்தை ரெடியா வச்சிக்கோங்க.. சிஎஸ்கேவை அலெர்ட் பண்ணிய அஸ்வின்..!
- கில்கிறிஸ்டாக மாறிய ரிசப் பண்ட்! தோனிக்கு அடுத்து கிடைத்த பொன்னான வாய்ப்பு
- கங்குலி கொடுத்த அட்வைஸ்.. புறக்கணித்த ஹர்திக் பாண்டியா.. "ஒரு முடிவோட தான் இருக்காரு போல".. இந்திய அணியில் எழுந்த பரபரப்பு
- ஜெயித்தாலும் தோத்தாலும் லதாஜி வாழ்த்து கிடைக்கும்.. எப்போதும் 2 விஐபி டிக்கெட்.. அன்று பிசிசிஐ எடுத்த முடிவு!
- இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. சிரிச்சிக்கிட்டே ரோஹித் சொன்ன வார்த்தை.. எகிறும் எதிர்பார்ப்பு..!
- தோனி அடிச்ச அதே அடி.. U 19 உலக கோப்பையின் கடைசி பந்து.. 11 வருசத்துக்கு அப்புறம் ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்த 'இளம்' வீரர்
- "இந்திய அணியில் என்னுடைய இடம்.." ஹர்திக் பாண்டியா சொன்ன சீக்ரெட்.. "இது எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல.." பொங்கி எழுந்த பிரபலங்கள்
- கோலியோட ‘100-வது’ டெஸ்ட்.. பிசிசிஐ போட்டுள்ள ‘சூப்பர்’ ப்ளான்?.. இதுமட்டும் நடந்த வேறலெவலா இருக்குமே..!
- 5 வருசத்துக்கு ரூ.40,000 கோடியா? IPL ஒளிபரப்பு உரிமை யாருக்கு? கடும் போட்டியில் 4 முன்னணி நிறுவனங்கள்!
- தோனி, பிசிசிஐ குறித்து ஒரே interview.. மொத்த பர்னிச்சரையும் உடைத்த ஹர்பஜன் சிங்!