“நீ நார்மலாவே ஆடு.. நான் இத பண்றேன்!”.. ‘ஆஸி மண்ணில் இந்தியாவின் வரலாற்று வெற்றி!’.. மைதானத்தில் நடந்த சீக்ரெட் திட்டங்களை போட்டு உடைத்த ரஹானே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணிக்கு ஒரு வரலாற்று மைல்கல் வெற்றியாக பிரிஸ்பன் டெஸ்ட் வெற்றி அமைந்துள்ளது. இதில் கேப்டன் ரஹானேவின் அணுகுமுறையும் முக்கிய பங்கு வகிப்பதாக பலராலும் பேசப்பட்டு வருகிறது.

புஜாராவின் தடுப்பாட்டம்,  மிகப்பெரிய சிக்சருடன் 22 பந்துகளில் 24 ரன்கள் விளாசிய கமின்ஸின் ஆட்டம், ரஹானேவின்  1 பவுண்டரி என அனைத்துமே முக்கியமானவை தான். தான் அவுட் ஆனவுடன் அகர்வாலை இறக்காமல் பந்த்தை இறக்கிய ரஹானேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் இந்த மேட்சில் பெரிதாக உதவியுள்ளது.  புஜாராவும் இவரும் மேலும் ஸ்கோரை வேகமாக நகர்த்தினர். ரன்களை 228க்குக் கொண்டு சென்றனர். ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்குத் 10 ரன்களே தேவை எனும் சூழல் வந்தபோது, ரிஷப் பந்த் ஹேசில்வுட்டை நேராக பவுண்டரி அடித்து இந்த வரலாற்று சாதனைக்கு தன் பங்களிப்பை தந்தார்.

ஆட்டம் முடிந்து இந்த வெற்றி பற்றி ரஹானே பேசும்போது, “ஒவ்வொரு வீரரையும் நினைத்தும் பெருமைப் படுகிறேன். இறங்கும் போதே புஜியிடம் (புஜாரா) ‘நீ நார்மலா ஆடு, நான் ஷாட் ஆடுறேன்’ என்று கூறினேன்.

காரணம் ரிஷப், மயங்க் இருந்தார்கள். அழுத்தத்தை அபாரமாக கையாண்டு சிறப்பாக ஆடிய புஜாராவுக்கு பாராட்டுகள். முடிவில் ரிஷப் பின்னி பெடல் எடுத்துவிட்டார். 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதன் முக்கியம் கருதியே, 5 பவுலர்களை தேர்ந்தெடுத்தோம். அனைவருக்கும் பாராட்டுக்கள். ரசிகர்களுக்கு நன்றிகள்.

ALSO READ: “இந்திய அணியை குறைச்சு எடை போட்ரக் கூடாது! கத்துக்கிட்டோம்!”.. “வெறும் 11 பேர்னு நெனைச்சோம்.. ஆனா அவங்க அத்தனை கோடி இந்தியர்கள்!” - இவரே சொல்லிட்டாரா? ஆஸி மண்ணில் இப்படி ஒரு ‘கெத்தான’ பாராட்டு!

நல்ல அணுகுமுறையில் ஆடுவதுதான் முக்கியம் என்று முடிவெடுத்த நாங்கள் அடிலெய்டுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை விவாதிக்கவே இல்லை.  இது எல்லாமே ஒரு அணியின் கூட்டுமுயற்சி” என கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்