VIDEO: ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்.. இது ‘ஒன்னு’ போதுங்க அவரை டீம்ல எடுக்க.. கவனம் பெறும் ‘ரஹானே’ செய்த செயல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இதில் மயங்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த புஜாரா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலியும் 35 ரன்களில் வெளியேறினார். ஆனாலும் மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் சதமடித்து (122 ரன்கள்) ஆட்டமிழக்காமல் உள்ளார். அதேபோல் 5-வதாக ரஹானே 40 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

முன்னதாக நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஹானே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் சமீப காலமாக ரஹானே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்தனர்.

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது நடைபெற்று வரும் செஞ்சூரியன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் இழந்து அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

பொதுவாக இந்திய மைதானங்களில் ரஹானேவின் ஸ்ட்ரைக் ரேட் குறைவுதான். ஆனால் வெளிநாட்டு மைதானங்களில் அவர் நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அதனால் வெளிநாட்டு மைதானங்களில் எப்போதும் ரஹானேவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. அதனை தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் நிரூபித்துள்ளார்.

இந்த நிலையில் இப்போட்டியில் பேட்டிங் செய்யும் போது பந்துவீச்சாளர் எப்படி பந்து வீசுகிறார் என ரஹானே கணிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு பலரும், இதுதான் ஒரு அனுபவ வீரர் எடுத்ததற்கான காரணம் என்றும்,  இதற்காகவே ரஹானேவை அணியில் எடுக்கலாம் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

RAHANE, INDVSA, CENTURION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்