CSK பத்தி ரஹானே சொன்ன வார்த்தை.. அடுத்த நிமிஷமே மாணவ மாணவிகள் செஞ்ச சம்பவம்!!... வைரல்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக இருப்பவர் ரஹானே. இவர் சமீபத்தில் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த ரிவேரா என்ற கலை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | நிலநடுக்கம் நடுவே... உயிரிழந்ததாக பெட்டியில் வைக்கப்பட்ட நபர்.. இறுதி சடங்கு நடக்க போறப்போ காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் ரஹானே தேசிய கொடி ஏற்றி விழாவையும் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் பேசிய ரஹானே, "இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த ஆண்டு விளையாடுகிறேன். அது பெருமையாக இருக்கிறது. விளையாட்டு, கலை போல், கல்வி போல் மிக முக்கியமான ஒன்று தான். விஐடி பல்கலைக்கழகத்தில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த விழாவில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இதை பார்க்கும்போது கிரிக்கெட் மைதானத்தில் இருப்பது போன்று உணர்வை தருகிறது. நான் கல்லூரி நாட்களை தவற விட்டேன். அந்த நேரத்தில் நாட்டுக்காக விளையாடிக் கொண்டிருந்தேன். இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் உங்களின் திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அதேபோல ராகுல் டிராவிட் சச்சின் தோனி ஆகியோர் தன்னுடைய ரோல் மாடல் என்றும் தெரிவித்த ரஹானே, அங்கிருந்து மாணவ மாணவிகள் கேள்விகளுக்கும் பதில் அளித்து இருந்தார். மேலும், "உங்கள் அனைவரிடமும் ஒரு விஷயம் கேட்கிறேன். சிஎஸ்கே அணியை எத்தனை பேருக்கு பிடிக்கும்?" என அவர் கேட்ட அடுத்த கணமே மாணவ மாணவிகள் அனைவரும் "சிஎஸ்கே சிஎஸ்கே" என கத்தி ஆரவாரம் செய்யவும் ஆரம்பித்திருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்தாண்டு ஐபிஎல் தொடர், மார்ச் 31 ஆம் தேதி ஆரம்பமாக உள்ள சூழலில்,  இதற்கான அட்டவணையையும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நடத்திய மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி ரஹானேவை ஏலத்தில் எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சிஎஸ்கே அணிக்காக ரஹானே ஆடுவதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | விவேக் பெயரை தெருவுக்கு வெச்சது மாதிரி, மயில்சாமி பெயரும் வைப்பாங்களா??... மகன்கள் சொன்னது என்ன??

RAHANE, RAHANE IN COLLEGE EVENT, CSK, IPL 2023

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்