VIDEO: ‘அவரை வர சொல்லுங்க’!.. கோப்பையை தூக்கியதும் ரஹானே கூப்பிட்ட அந்த வீரர்.. நீங்க ‘வேறலெவல்’ சார்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 328 ரன்களை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்தது. அப்போது தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த சுப்மன் ஹில் மற்றும் புஜாரா கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் சுப்மன் ஹில் 91 ரன்களில் அவுட்டாகி சதத்தை நழுவவிட்டார். புஜாரா அரைசதத்தை (56) கடந்தார். இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் ரஹானே 24 ரன்களில் அவுட்டாக, அடுத்ததாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் களமிறங்கினார்.

ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த், 138 பந்துகளில் 89 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். அதேபோல் வாசிங்டன் சுந்தரும் கடைசி கட்டத்தில் 22 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றிக்கு உதவினார். இந்த நிலையில் 7 விக்கெட் இழப்புக்கு 329 ரன்களை எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்துக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரின் வெற்றி கோப்பையை பெற்ற கேப்டன் ரஹானே, அதை தமிழக வீரரான நடராஜன் கையில் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது வாழ்த்தையும் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்