"இதுனால தான் அந்த 'கேக்'க நான் வெட்டல..." 'முதல்' முறையாக மனம் திறந்த 'ரஹானே'... 'நீ ரொம்ப பெரிய 'மனுஷன்'யா... நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்களது சொந்த மண்ணிலேயே வைத்து வெற்றி கண்டிருந்த நிலையில், இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்திய கேப்டன் விராட் கோலி இந்தியாவிற்கு திரும்பியிருந்த நிலையில், அதன்பிறகு இந்திய கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்றிருந்தார். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில், அடுத்த மூன்று போட்டிகளில் இரண்டில் இந்திய அணி வெற்றி பெற்றுத் தொடரை கைப்பற்றியது. இதனால், ரஹானேவின் கேப்டன்சியும் அனைவரால் பாராட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மகத்தான வெற்றியுடன் இந்தியா திரும்பியிருந்த ரஹானேவிற்கு மும்பையிலுள்ள அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து, சிறிய அளவில் பாராட்டு விழா ஒன்றை நடத்தினர். அப்போது, அந்த விழாவில் கேக் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

அதன் மீது கங்காரு பொம்மை ஒன்றும் இருந்தது. இதனால் அந்த கேக்கை வெட்ட ரஹானே மறுத்திருந்தார். கங்காரு, ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு என்பதால் அதனை ரஹானே மறுத்திருந்ததால், அவரது செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்திருந்தது.

இந்நிலையில், தற்போது இதுபற்றி ரஹானே முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். 'கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு. எனவே தான் கங்காரு வடிவிலான கேக்கை வெட்ட நான் மறுப்பு தெரிவித்தேன். எதிரணி வீரர்களுக்கு நாம் மரியாதையளிக்க வேண்டும். நாம் வரலாறே படைத்திருந்தாலும் நாம் அவர்களை நன்கு நடத்த வேண்டும். எதிரணிக்கும், மற்ற நாடுகள் மீதும் நான் மதிப்பளிக்க வேண்டும். அதனால் தான் அந்த கேக்கை வெட்டக் கூடாது என்ற முடிவை நான் எடுத்தேன்' என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்