ஆண் குழந்தைக்கு தந்தையான ரஹானே.. "KKR டீம் போட்ட சூப்பர் கமெண்ட்".. வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரரான ரஹானே, தனக்கு மகன் பிறந்துள்ள தகவலை தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக வலம் வந்த ரஹானே, குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் தனது பேட்டிங் திறன் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும், தற்போது உள்ளூர் கிரிக்கெட்  போட்டிகளிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.

அதே போல, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் ரஹானே இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனக்கு மகன் பிறந்துள்ள தகவலை சமூக வலைத்தளங்களில் மிகவும் நெகிழ்ச்சியுடன் ரஹானே பகிர்ந்துள்ளார். அஜிங்கியா ரஹானே மற்றும் ராதிகா தம்பதியினருக்கு ஏற்கனவே ஆர்யா என்ற பெண் குழந்தை உள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது ரஹானே - ராதிகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது தொடர்பாக, ரஹானே பகிர்ந்த பதிவில், "இன்று காலை, நானும் எனது மனைவியும் ஆண் குழந்தையை இந்த பூமியில் வரவேற்றுள்ளோம். எனது மனைவி ராதிகா மற்றும் குழந்தை என இருவரும் தற்போது நலமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளனர். உங்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ரஹானே - ராதிகா ஆகியோருக்கு குடும்பத்தினர், கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும், ரஹானே தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி வரும் கொல்கத்தா அணி, இன்ஸ்டாகிராம் பதிவில் செய்துள்ள கமெண்ட் ஒன்று, இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

அவர்களின் கமெண்ட்டில், "வாழ்த்துக்கள். ரஹானே என பின்னால் எழுதப்பட்ட சிறிய சைஸ் ஜெர்சி ஒன்றை தயார் செய்து வைக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.

AJINKYA RAHANE, FATHER, KKR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்