'நீங்கள் இருவரும் சீனியர் வீரர்கள் தானே’... ‘இப்டி நீங்களே செய்யலாமா?’... ‘வார்னிங் கொடுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு பின் 2 முக்கிய சீனியர் வீரர்கள் மீது பிசிசிஐ கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடிலெய்டில் இந்தியாவுக்கும் எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. அதிலும் இரண்டாவது இன்னிங்ஸ்சில் இந்திய அணி வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு பின் 2 முக்கியமான சீனியர் வீரர்களுக்கு கிரிக்கெட் நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏனெனில் இந்திய அணியில் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று கருதப்படும் முக்கிய இரண்டு வீரர்களில் ஒருவர் புஜாரா, மற்றொருவர் ரஹானே. இந்த இரண்டு பேருமே இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். இப்படி இருக்கும் போது டெஸ்ட் போட்டிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு பேருமே சரியாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸ்சில் புஜரா 160 பந்துகளுக்கு 43 ரன்களும் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்சில் டக் அவுட்டும் ஆனார்.
இத்தனைக்கும் கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பாராட்டுக்குரிய வகையில் விளையாடி, தொடர் நாயகன் விருதும் வென்றார். மறுபக்கம் துணை கேப்டன் ரஹானே முதல் இன்னிங்ஸ்சில் 72 பந்துகளுக்கு 42 ரன்களும், அடுத்த இன்னிங்ஸ்சில் டக் அவுட்டும் ஆனார். இந்திய அணியால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீனியர்களான இரண்டு பேருமே மோசமாக ஆடி சொதப்பினார்கள்.
இதன் மூலம் இந்திய அணியும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்த இரண்டு பேரையும் தனியாக அழைத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. அனுபவ வாய்ந்த நீங்களே இப்படி ஆடினால் என்ன அர்த்தம் என்று பிசிசிஐ சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. அடுத்த போட்டியில் நீங்கள் நன்றாக ஆட வேண்டும் என்றும் பிசிசிஐ எச்சரிக்கையுடன் கூறியுள்ளது. இந்திய அணியில் உங்கள் இருவருக்கும் அனுபவம் உள்ளது.
நீங்கள் பொறுப்பாக ஆட வேண்டும். உங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து ஆட வேண்டும். அணியில் கோலியும் அடுத்தடுத்த போட்டிகளில் ஆட மாட்டார். அதனால் பொறுப்பு கேப்டன் நீங்கள் தான் என்பதால், கவனமாக ஆட வேண்டும் என்று ரஹானேவிடம் கண்டிப்பு காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தம்பி நட்டு... இங்க வாங்க'!.. இந்தியாவுக்கு கிளம்பும் முன்... நடராஜனை அழைத்துப் பேசிய கோலி!.. கடைசியா இருக்குற வாய்ப்பு 'இது' தான்!.. அற்புதம் நிகழுமா?
- அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ‘ஓய்வு’.. திடீரென அறிவித்த முன்னாள் ‘சிஎஸ்கே’ வீரர்..!
- 'அந்த 2 இளம் வீரர்களுக்கும்’... ‘அடுத்த டெஸ்ட் போட்டியில்’... ‘ஆடும் லெவனில் இடம் கிடைச்சாதான் சரி வரும்’... ‘முன்னாள் கேப்டன் கருத்து’...!!!
- 'இதுதான் அவருக்கு கடைசி போட்டியா???'... 'இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே?!!'... 'கோரிக்கை வைத்த பிரபல வீரர்!!!'...
- 'இத விட பெரிய அவமானம் இருக்கவே முடியாது'!.. பயங்கர நெருக்கடியில் பெரிய தலைகள்!.. 'பறிபோகிறதா பதவி'?.. இந்திய அணியில் அடுத்தடுத்து செம்ம ஷாக்!!
- ‘அந்த இளம் வீரர்’... 'பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலா இருக்க மாட்டாரு’... ‘அதனால சீனியர் வீரரை ஃபிளைட் பிடிச்சு அனுப்புங்க’... ‘முன்னாள் கேப்டன் கருத்து’...!!!
- ‘மாறுபாடு அடைந்து வேகமாக பரவும்’... ‘புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘மீண்டும் லாக் டவுனை நோக்கி சென்ற நகரம்’... 'கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பு’...!!!
- ‘தயவுசெஞ்சு ஆஸ்திரேலியாவுக்கு அவர உடனே அனுப்புங்க’... ‘அப்பதான் இந்திய அணியை காப்பாத்த முடியும்’... ‘பிசிசிஐ-க்கு அறிவுரை சொல்லும் முன்னாள் வீரர்’...!!!
- ‘நான் கண்ண கசக்கிட்டு பார்த்தா’... ‘இந்திய அணியை தாறுமாறாக தூர்வாரி’... ‘சந்தோஷப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான்’...!!!
- 'இனி வரப்போற டெஸ்ட் மேட்ச்களில் நான் விளையாடல...' 'ஷமி அறிவிப்பு...' - அப்போ அவருக்கு பதில் விளையாட போறது யாரு...?