பொத்திப் பொத்தி பாதுகாத்த ‘கௌரவம்’.. இப்டி ஒரே போட்டியில ‘சுக்குநூறா’ ஒடச்சிட்டாங்களே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 47-வது லீக் போட்டி இன்று (துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 219 ரன்களை குவித்தது.

இதில் அதிகபட்மாக தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 66 ரன்களும் சாகா 87 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டேவும் 44 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனை அடுத்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா 4 ஓவர்கள் வீசி 54 ரன்களை விட்டுக்கொடுத்தார். மேலும் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. அவர் இதுவரை 25 டி20 போட்டிகளில் தொடர்ந்து விக்கெட் எடுத்து வந்தார். ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது ஒரு விக்கெட்டாவது எடுத்து விடுவார்.

ஆனால் இன்றைய ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரபாடா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. மேலும் இவர் ஓவரில்தான் அதிக ரன்கள் சென்றுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்து பர்ப்பில் கேப்பை தன் வசம் வைத்துள்ளவர் ரபாடா என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ தொடர்ந்து 27 போட்டிகளில் விக்கெட் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்