‘பேட்டிங் செய்யும்போது ரபாடா என்ன கிண்டல் பண்ணாரு’.. ஆனா..! உண்மையை உடைத்த பிரபல இந்திய வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபேட்டிங் செய்யும் போது என்னுடைய கவனம் சிதறும் வகையில் ரபாடா கிண்டல் செய்தார் என புஜாரா தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக விசாகப்பட்டிணத்தில் நடந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து 2 -வது டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 254 ரன்களும், மயங்க் அகர்வால் 108 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வீரர் புஜாரா, தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா ஸ்லெட்ஜ் (sledge) செய்ய முயன்றார் என்றும், ஆனால் தான் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ‘ரபாடா என்ன சொன்னார் என நினைவில் இல்லை. ஆனால் அவர் எப்போதும் பேட்ஸ்மேன்களை நோக்கி எதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் என் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார் என எனக்கு தெரியும். அவர் மட்டுமில்லை எல்லா பந்துவீச்சாளர்களும் ஏதாவது தெரிவித்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என நான் கவனிக்க மாட்டேன். பேட்ஸ்மேனாக என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமே என் கவனத்தில் இருக்கும். அவர்கள் சொல்வதை கவனிக்க மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘விராட் கோலிக்கு வாழ்த்து சொல்லி’.. ‘தன்னைத் தானே கலாய்த்துக் கொண்ட சாஹல்’..
- ‘ஜஸ்ட் மிஸ்’ ‘ஹெல்மெட்டில் அடித்து பறந்த பந்து’.. வைரலாகும் வீடியோ..!
- ‘முதுகுல ஆப்ரேஷன்’.. ‘கஷ்டப்பட்டு நடந்த பாண்ட்யா’.. வைரல் வீடியோ..!
- ‘வோர்ல்டு கப்புக்கு பிறகு’.. ‘தோனியைப் பார்க்கவே இல்லை’.. ‘இதுதான் அவருடைய எதிர்காலம்’..
- ‘கிரிக்கெட்டில் 80 ஆண்டுகளுக்குப் பின்’.. ‘மோசமான சாதனையைப் பதிவு செய்த இந்திய வீரர்’..
- ‘அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததே நான்தான்’.. ‘என்னைப் பார்த்தாலே அவருக்கு பயம்’.. ‘பிரபல இந்திய வீரரை வம்புக்கிழுத்த பவுலர்’..
- Video: ‘ஜாம்பவானின் உலக சாதனையை’... ‘சமன் செய்த அஸ்வின்’... ‘அதிவேகத்தில் இவ்ளோ விக்கெட்டுகளா???’... வாழ்த்து சொன்ன பிசிசிஐ!
- ‘25 ஆண்டுகால சாதனையைத் தகர்த்து’.. ‘தெறிக்கவிட்ட ஹிட்மேன்’..
- ‘நாம ஒரு பக்கம் வீசுனா அது ஒரு பக்கம் போகுதே’.. ‘பந்தை நழுவவிட்ட ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ..!
- ‘கோலி கொடுத்த சூப்பர் அட்வைஸ்’.. ‘வீசிய அடுத்த பந்தே விக்கெட் எடுத்த இஷாந்த்’.. வைரல் வீடியோ..!